Homeசெய்திகள்இந்தியா2047க்குள் புதிய இந்தியா- குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

2047க்குள் புதிய இந்தியா- குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

-

- Advertisement -

எந்தவித பாகுபாடும் இன்றி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் எனது அரசு பணியாற்றிவருகிறது என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.

draupadi murmu

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, “எந்தவித பாகுபாடும் இன்றி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் எனது அரசு பணியாற்றிவருகிறது. பட்டியல், பழங்குடியின இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் புதிய கனவுகளை காணத் தொடங்கி இருக்கின்றனர். ஏழைகளின் பிரச்னைகளை தீர்க்கவும், அவர்களை முன்னேற்றவும் தொடர்ந்து பணியாற்றுகிறது இந்த அரசு. 2047 ஆம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்க தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை வகைகளில் உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ளன. உலகப் பிரச்னைகளுக்கு இந்தியா தீர்வளித்து வருகிறது.

we-r-hiring

இன்று தன்னம்பிக்கையில் உயர்ந்து நிற்கிறது இந்தியா. உலகமே இந்தியாவை எதிர்நோக்கி உள்ளது. ஏழை மக்கள் முன்னேற்றத்துக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. உலகின் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை இந்தியா வழங்கி வருகிறது, தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது. ஜல்ஜீவன் திட்டம் மூலம் கிராமப்புறங்களில் பெரும்பான்மையான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இன்று நாட்டில் உறுதியான, அச்சமற்ற தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ளும் அரசு ஆட்சியில் உள்ளது.

ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் 11 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் பெரும்பாலான ஏழை மக்கள் பயன்பெறுகிறார்கள். கொரோனா காலத்தில் மக்கள் பசியாற பிரதமர் அன்ன யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டது. நவீனத்துவம் மூலம் மக்களை அணுகுவதால் இந்த திட்டங்கள் அனைவரையும் சென்றடைகின்றன. வளர்ச்சி அடையாத பகுதிகள் மீது தனி கவனம் செலுத்தப்படுகிறது. பிரதமரின் கரீம் கல்யாண் யோஜனா திட்டத்தை முன்னெடுத்து செல்ல அரசு முடிவு செய்துள்ளது.

Home

பல நூற்றாண்டுகளாக வஞ்சிக்கப்பட்ட சமூகத்தின் ஆசைகளை நிறைவேற்றும் அரசு பாஜக. விவசாயிகள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு முன்னெடுத்துவருகிறது. மலைவாழ் மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. நாட்டில் 100-க்கும் மேற்பட்ட வளர்ச்சி அடையாத மாவட்டங்கள் இருந்தன. நாட்டில் வளர்ச்சி அடையாமல் இருந்த மாவட்டங்கள் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளன. எல்லை பகுதியில் வசிக்கும் மக்களுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. எல்லை பகுதிகளில் நிலவிய நக்சல் இயக்கங்களில் தாக்கம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அரசின் மக்கள் நலன் திட்டங்கள் பெண்களுக்கான முக்கியத்துவம் கொடுப்பதாக அமைந்துள்ளது. அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதே அரசின் முக்கிய நோக்கம்” எனக் கூறினார்.

MUST READ