Homeசெய்திகள்இந்தியாவருமான வரி பிடித்தத்தை திரும்ப பெறுவது எப்படி?

வருமான வரி பிடித்தத்தை திரும்ப பெறுவது எப்படி?

-

- Advertisement -

ஆடிட்டர் மூலம் வருமான வரி (IT) கணக்கு தாக்கல் செய்து வரி பிடித்தத்தை திரும்ப பெறுவதை பலரும் வழக்கமாகக் கொண்டிருப்பர். செலுத்தப்பட்ட வரிக்கும் உங்களின் உண்மையான வரிப் பொறுப்புக்கும் இடையில் பொருந்தாத நிலை ஏற்பட்டால் வருமான வரித் திரும்பப்பெறுதல் நிகழ்கிறது.

வருமான வரி பிடித்தத்தை திரும்ப பெறுவது எப்படி?வருமான வரி ரீஃபண்ட் என்பது, கொடுக்கப்பட்ட நிதியாண்டில் (FY) உங்கள் இறுதி மதிப்பிடப்பட்ட கடனை விட அதிக வரியைச் செலுத்தும் போது, ​​வரி செலுத்துவோர் அவருக்குத் திருப்பிச் செலுத்தும் நிலையாகும்.

 

இதை நாமே எளிதில் எந்த செலவுமின்றி செய்யலாம். வருமான வரி ஆணையத்தின் https://www.incometax.gov.in /iec/foportal/ இணையதளப் பக்கத்திற்கு செல்ல வேண்டும். அங்கு Register என்ற பகுதியில் “பான்” எண்ணை உள்ளிட்டு, கடவுச்சொல் உருவாக்கி பயனாளராக வேண்டும்.

 

பான் எண், கடவுச்சொல்லை உள்ளிட்டு நுழைந்ததும், IT கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய வருடத்தை தேர்வு செய்து, அதற்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவிட வேண்டும்.

 

உங்கள் வருமானம், அது ஈட்டப்பட்ட விதம், வரிவிலக்குகளை பதிவிட்டு, Return தொகையை ஆதார், E-sign மூலம் உறுதி செய்ய வேண்டும். அது உறுதியானதும் ஒப்புதல் அளிக்க வேண்டும். இது சரிபார்க்கப்பட்டு வரிப்பிடித்த தொகை வங்கிக் கணக்கில் திருப்பி அளிக்கப்படும்.

MUST READ