பெருவெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இந்தியா இதுவரை 4 சரக்கு விமானங்கள் மூலம் 68.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.


விமானங்கள் மூலம் நிவாரண உதவி விவரம்:
ஆகஸ்ட் 26: இந்திய விமானப்படையின் சி-130ஜே (C-130J) சரக்கு விமானம் மூலம் முதற்கட்டமாக 10 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன.
ஆகஸ்ட் 27: சி-17 குளோப்மாஸ்டர் (C-17 Globemaster) விமானம் மூலம் 37.5 டன் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
ஆகஸ்ட் 28: சி-130ஜே விமானம் மூலம் 10 டன் பொருட்கள் நேபாள தலைநகர் காத்மாண்டிற்கு அனுப்பப்பட்டன.
ஆகஸ்ட் 29: இந்திய விமானப்படையின் சரக்கு விமானம் மூலம் மேலும் 11 டன் நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.
ஒட்டுமொத்தமாக 4 விமானங்கள் மூலம் அனுப்பப்பட்ட 68.5 டன் நிவாரணப் பொருட்களில் போர்வைகள், தார்பாலின் கூடாரங்கள் மற்றும் தூங்குவதற்கான சிறப்புப் படுக்கைகள் ஆகியவை அடங்கும்.
தற்காலிக இரும்புப் பாலங்கள்:
நேபாளம் முழுவதும் வெள்ளப் பெருக்கினால் 40-க்கும் மேற்பட்ட பிரதான பாலங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் அங்கு தற்காலிகப் பாலங்களை அமைக்க இந்தியாவின் உதவியை நேபாள அரசு கோரியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, முதற்கட்டமாக தற்காலிக இரும்புப் பாலங்கள் அமைப்பதற்கான உபகரணங்கள் மற்றும் பொருட்கள் 16 லாரிகளில் நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
‘போதைப் பொருளற்ற பாரதத்தை உருவாக்குவதே எனது கனவு’: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு!
