Homeசெய்திகள்இந்தியாAI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம்

AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம்

-

- Advertisement -

AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நூட்பத்துடன் ஒருங்கிணைப்பாக உருவாக்கப்பட்ட முதல் தானியங்கி டோல்கேட் குஜராத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம்

இந்தியாவில் போக்குவரத்து மேலாண்மையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், முதல் முழுமையான தானியங்கி சுங்கச்சாவடி (Automated Tollgate) குஜராத் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பாக உருவாக்கப்பட்ட இந்த சுங்கச்சாவடி, வாகன ஓட்டிகளுக்கு வேகமான மற்றும் தடையற்ற பயணத்தை வழங்கும் வகையில் செயல்படுகிறது.

we-r-hiring

இந்த தானியங்கி சுங்கச்சாவடியில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை வாகனங்கள் சுங்கச்சாவடியை அணுகும் போது அவற்றின் நம்பர் பிளேட்களை தானாகவே அடையாளம் காணும் திறன் கொண்டவை. இதன் மூலம், வாகனங்களை நிறுத்தி கைமுறையாக கட்டணம் வசூலிக்கும் நடைமுறை முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.

மேலும், பாஸ்டேக் (FASTag) தொழில்நுட்பம் மூலம் சுங்கக் கட்டணம் தானாகவே கழிக்கப்படுகிறது. வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பாஸ்டேக்(FASTag ) ஸ்டிக்கர் மூலம் கட்டணம் மின்னணு முறையில் உடனடியாக வசூலிக்கப்படுவதால், வாகனங்கள் சுங்கச்சாவடியில் நிற்க வேண்டிய அவசியமே இல்லை.

இந்த புதிய முறையால், சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் சிரமம் குறையும். குறிப்பாக அதிக போக்குவரத்து நேரங்களில் ஏற்படும் நெரிசல் பிரச்சினைகளும் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகனங்கள் தடையின்றி செல்லும் வசதி கிடைப்பதால், எரிபொருள் சேமிப்பும், பயண நேரக் குறைப்பும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…

MUST READ