குளிர்கால கூட்டத்தொடரில் எம்.பி.இளையராஜா ஒருநாள் கூட பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எம்பியாக இளையராஜா பதவியேற்றுக்கொண்டார். இளையராஜா, பிடி உஷா உள்ளிட்ட தென்மாநிலங்களை சேர்ந்த 4 பேரை அண்மையில் மாநிலங்களவிஅ உறுப்பினராக பாஜக நியமித்தது. நியமன எம்.பியாக பதவியேற்ற இளையராஜாவின் குளிர்கால கூட்டத்தொடர் வருகை பதிவு பூஜ்ஜியம் என பதிவாகியுள்ளது. அதன்படி குளிர்கால கூட்டத்தொடரில் எம்.பி.இளையராஜா ஒருநாள் கூட பங்கேற்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் குளிர்கால கூட்டத்தொடர் அதாவது இளையராஜாவின் முதல் கூட்டத்தொடர் டிசம்பர் 7 முதல் 23 ஆம் தேதி வரை நடந்தது. 13 நாட்கள் நடந்த குளிர்கால கூட்டத்தொடரில் இளையராஜா ஒருநாள் கூட பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜயேந்திர பிரசாத் 2 நாட்களும், வீரேந்திர ஹோகாதே 5 நாட்கள் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர். நியமன எம்.பிக்களில் பி.டி.உஷா 13 நாட்கள் நாடாளுமன்ற கூட்டத்திலும், ஒரு சட்ட விவாத கூட்டத்திலும் பங்கேற்றுள்ளார்.
