கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தெர்தல் நடைபெறவுள்ளது.
பெங்களூரு, கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதனால், தேர்தல் களம் அனல் பறந்து வரும் நிலையில், நேற்று கர்நாடகாவில் 189 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஆளும் பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது.

பல சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு இந்த பட்டியலில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மாறாக 52 புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த முறை சீட் கொடுக்கப்படாத சிட்டிங் எம்எல்ஏக்களில் சிலர் அதிருப்தி எம்எல்ஏக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்தார். முன்னதாக ஜேடிஎஸ், காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சி அண்மையில் 166 வேட்பாளர்களை அறிவித்தது. இதில் 11 பேர் முஸ்லிம் வேட்பாளர்கள் என்பது குறிப்பிடதக்கது.