Homeசெய்திகள்இந்தியாவருமான வரி தாக்கல் செய்யும் முன் தெரிந்து கொள்ளுங்கள்…எந்த வரி முறை உங்களுக்கு லாபம்?

வருமான வரி தாக்கல் செய்யும் முன் தெரிந்து கொள்ளுங்கள்…எந்த வரி முறை உங்களுக்கு லாபம்?

-

- Advertisement -

வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும் காலம் தொடங்கியுள்ள நிலையில், பழைய வரி முறை (Old Tax Regime) மற்றும் புதிய வரி முறை (New Tax Regime) ஆகியவற்றில் எதைத் தேர்வு செய்வது என்ற குழப்பம் பலரிடம் நிலவுகிறது. வருமான வரி தாக்கல் செய்யும் போது, குறைவான விலக்குகளை (Deductions) கோருபவர்களுக்கு புதிய வரி முறை (New Tax Regime) ஏற்றதாக இருக்கும் .அதே சமயம், அதிக முதலீடுகள், காப்பீடு, மற்றும் வீட்டுக்கடன் மூலம் கணிசமான விலக்குகளை கோருபவர்களுக்கு பழைய வரி முறை (Old Tax Regime) பலனளிக்கும்.வருமான வரி தாக்கல் செய்யும் முன் தெரிந்து கொள்ளுங்கள்…எந்த வரி முறை உங்களுக்கு லாபம்?

2025-26 நிதியாண்டுக்கான புதிய வரி முறையில், ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரிச் சுமை இல்லை. சம்பளதாரர்களுக்கான ரூ.75,000 நிலையான கழிவையும் (Standard Deduction) சேர்த்தால், இந்த வரம்பு ரூ.12.75 லட்சமாக உயர்கிறது. இதனால் நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கு புதிய வரி முறை கவர்ச்சிகரமானதாக உள்ளது. தற்போது புதிய வரி முறையே இயல்புநிலை (Default) முறையாக உள்ளது. ஊழியர்கள் வேறு தேர்வைத் தெரிவிக்காவிட்டால், அவர்கள் தானாகவே புதிய வரி முறையின் கீழ் வருவார்கள்.

we-r-hiring

ஆனால் தொழில் மற்றும் சுயதொழில் மூலம் வருமானம் பெறுபவர்கள் வரி முறையை அடிக்கடி மாற்ற முடியாது. எனவே அவர்கள் முடிவெடுப்பதற்கு முன் விதிமுறைகளை நன்கு அறிந்திருக்க வேண்டும். பழைய வரி முறையில் 80C, 80CCD, 80D, வீட்டுக் கடன் வட்டி, HRA உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் மற்றும் வரிச் சலுகைகள் கிடைக்கின்றன. இதன் மூலம் வரிக்குட்பட்ட வருமானத்தை கணிசமாகக் குறைக்க முடியும். மாறாக, புதிய வரி முறையில் பெரும்பாலான கழிவுகள் கிடையாது. நிலையான கழிவு, NPS-இல் நிறுவனத்தின் பங்களிப்பு மற்றும் சில குறிப்பிட்ட சூழல்களில் வீட்டுக் கடன் வட்டி சலுகை மட்டுமே வழங்கப்படுகிறது.

வரி நிபுணர்களின் கருத்துப்படி, ஒருவரின் மொத்த வரிச் சலுகைகள் ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால் பழைய வரி முறை அதிக பலன் தரக்கூடும். அதற்கு குறைவாக இருந்தால், குறைந்த வரி விகிதங்களைக் கொண்ட புதிய வரி முறையே சிறந்த தேர்வாக இருக்கலாம். மேலும், பழைய வரி முறையில் அடிப்படை வரி விலக்கு வரம்பு ரூ.2.5 லட்சமாக இருந்த நிலையில், புதிய வரி முறையில் அது ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வரிச் சுமை இல்லாவிட்டாலும், வருமானம் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறினால் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது கட்டாயம். இல்லையெனில் எதிர்காலத்தில் அபராதம் உள்ளிட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடலாம்.

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு ரூ.600 கோடி – மத்திய அரசு ஒப்புதல்

MUST READ