Homeசெய்திகள்இந்தியாபுதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு ரூ.600 கோடி - மத்திய அரசு ஒப்புதல்

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு ரூ.600 கோடி – மத்திய அரசு ஒப்புதல்

-

- Advertisement -

புதுச்சேரி விமான நிலையத்தை நவீனப்படுத்தி விரிவாக்கம் செய்வதற்காக மத்திய அரசு ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு ரூ.600 கோடி - மத்திய அரசு ஒப்புதல்

ரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரியின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார். கடந்த 2021-ம் ஆண்டு புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக எல். முருகன் தெரிவித்தார்.

we-r-hiring

விமான நிலைய விரிவாக்கத்திற்கான ரூ.600 கோடி நிதி ஒதுக்கீட்டுக்கு மத்திய உள்விவகார அமைச்சகம் அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கியுள்ளதாக புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயமும் உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது நிதியை விடுவிப்பதற்கான இறுதி கட்ட நிர்வாக நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தின் மூலம் புதுச்சேரி விமான நிலைய ஓடுதளம் நீட்டிக்கப்பட்டு, பெரிய ரக விமானங்கள் இயக்கப்படுவதற்கும், பிற மாநிலங்களுடனான வான்வழி இணைப்பை மேம்படுத்துவதற்கும் வாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், புதுச்சேரியில் பல முக்கிய வளர்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன. இந்திரா காந்தி சதுக்கம் மற்றும் ராஜீவ் காந்தி சதுக்கத்தை இணைக்கும் அடுக்கு மேம்பாலத் திட்டம், ஜிப்மர் மருத்துவமனையில் அதிநவீன பல்லுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் மற்றும் சேதராப்பட்டு-காரசூர் பகுதிகளில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் திட்டங்கள் இதில் அடங்கும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் புதுச்சேரிக்கு சிறப்பு மத்திய உதவியாக சுமார் ரூ.15,000 கோடி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார். மேலும், சிறப்புப் பொருளாதார மண்டலம் மூலம் சுமார் 10 ஆயிரம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். புதுச்சேரியின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் இரண்டாவது இந்தியா ரிசர்வ் பட்டாலியன் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும், இதன் மூலம் மேலும் ஆயிரம் இளைஞர்களுக்கு காவல்துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும், ரூ.92 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதுச்சேரி ரயில் நிலைய நவீனமயமாக்கல் பணிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார். மத்திய அரசின் தொடர் நிதியுதவிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் புதுச்சேரியின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிராமப்புறங்களில் தீவிரமடையும் வேலைவாய்ப்பு நெருக்கடி…வேலையின்மை விகிதம் உயர்வு…

MUST READ