spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகாங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு!

-

- Advertisement -

 

mallikarjun kharge press meet

we-r-hiring

மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்கிரிப்ட் ஒர்க் போயிட்டு இருக்குன்னு நெல்சன் சார் சொன்னாரு…… ‘ஜெயிலர் 2’ குறித்து மிர்னா!

முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், வி.ஐ.பி.க்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அளித்து வருகிறது. இசட் பிளஸ் பாதுகாப்பு என்பது மிக உயரிய பாதுகாப்புப் பிரிவாகும். குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மிகுந்த அச்சுறுத்தல் உள்ள தலைவர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும்.

இசட் பிளஸ் பாதுகாப்பு என்பது நாளொன்றுக்கு 36 கமாண்டோ வீரர்கள் மூன்று வேளையிலும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பர். இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

‘கார்த்தி 27’ ஷூட்டிங் நிறைவடைந்ததா?…… வெளியான புதிய தகவல்!

மல்லிகார்ஜுன கார்கேவின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சி.ஆர்.பி.எப் வீரர்களின் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ