Homeசெய்திகள்இந்தியாமகாராஷ்டிராவில் புதிய 'மதச் சுதந்திரச் சட்டம் 2026'! இனி சர்ச்சுக்கு போக 'Self Declaration' கட்டாயமா?...

மகாராஷ்டிராவில் புதிய ‘மதச் சுதந்திரச் சட்டம் 2026’! இனி சர்ச்சுக்கு போக ‘Self Declaration’ கட்டாயமா? மருதையன் உடைக்கும் உண்மைகள்!

-

- Advertisement -

மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள ‘மகாராஷ்டிரா மதச் சுதந்திரச் சட்டம் 2026’ (Maharashtra Freedom of Religion Act 2026), அதன் பின்னணியில் சர்ச்சுகளுக்கு எழுந்துள்ள நெருக்கடிகள், எதிர்கட்சிகளின் அணுகுமுறை மற்றும் நடப்பு அரசியல் சூழல்கள் குறித்து அரசியல் விமர்சகர் மருதையன் விவரித்துள்ளாா். மகாராஷ்டிராவில் புதிய 'மதச் சுதந்திரச் சட்டம் 2026'! இனி சர்ச்சுக்கு போக 'Self Declaration' கட்டாயமா? மருதையன் உடைக்கும் உண்மைகள்!

‘மதமாற்ற தடைச் சட்டம்’ அல்ல; ‘மதச் சுதந்திரச் சட்டம்’ என்ற பெயரில் புதியக் கெடுபிடி!

பேட்டியின் தொடக்கத்தில் கருத்து தெரிவித்த மருதையன், ஊடகங்களும் பொதுமக்களும் இச்சட்டத்தை வெறுமனே “மதமாற்ற தடைச் சட்டம்” என்று அழைப்பதை ஆட்சேபித்தார். இச்சட்டத்தின் அதிகாரப்பூர்வப் பெயர் ‘மகாராஷ்டிரா மதச் சுதந்திரச் சட்டம் 2026’ (Maharashtra Freedom of Religion Act 2026) என்பதாகும். கடந்த மார்ச் மாதத்தில் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. மதச் சுதந்திரம் என்ற பெயரில் சட்டத்தின் தலைப்பு இருந்தாலும், அதன் உள்ளடக்கமும் செயல்பாடுகளும் முற்றிலும் சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமைகளைப் பறிக்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளன என்று அவர் குற்றம் சாட்டினார்.

we-r-hiring

4,000-க்கும் மேற்பட்ட சர்ச்சுகளில் ஆய்வு மற்றும் கெடுபிடிகள்!

மகாராஷ்டிராவில் இச்சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்து, ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச்சுகள், ஜெபக் கூடங்கள் மற்றும் CSI கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் 4,000-க்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்களைக் குறிவைத்து தீவிரச் சோதனைகளும் நெருக்கடிகளும் கொடுக்கப்பட்டு வருகின்றன.

  • திடீர் சோதனைகள்: ஞாயிறு வழிபாட்டின் போது 30-க்கும் மேற்பட்ட நபர்கள் திடீரென வழிபாட்டுத் தலங்களுக்குள் புகுந்து, வழிபட வந்தவர்களிடம் பெயர்களைக் கேட்டு, அடையாள அட்டைகளைக் காண்பிக்குமாறு வற்புறுத்துகின்றனர்.

  • சுய சான்றொப்பப் படிவம் (Self Declaration): கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களுக்குள் சென்று வழிபடுவதற்கு முன்பாகவே, கற்பனைக்கு எட்டாத வகையில் சுய சான்றொப்பப் படிவங்களைச் (Self Declaration) சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஸ்ட்ரக்சர் உருவாக்கப்பட்டு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிராவில் புதிய 'மதச் சுதந்திரச் சட்டம் 2026'! இனி சர்ச்சுக்கு போக 'Self Declaration' கட்டாயமா? மருதையன் உடைக்கும் உண்மைகள்!

காங்கிரஸ் ஆட்சி செய்த மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ள நிலை!

இச்சட்டம் குறித்து இந்தியாவில் பெரிய அளவிலான விவாதங்கள் எதுவும் எழாமல் எதிர்கட்சிகள் அமைதி காப்பது குறித்துப் பேசிய மருதையன், பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த/இருக்கும் சில மாநிலங்களிலும் கூட இத்தகைய சட்டங்கள் அல்லது கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒன்று எனக் குறிப்பிட்டார். சிறுபான்மை சமூகத்தினரையும் தலித் சமூகத்தினரையும் காப்பாற்றுவதாகக் கூறிக்கொள்ளும் அரசியல் கட்சிகள், இத்தகைய சட்டங்களின் தீவிரத்தை உணர்ந்து அதை எதிர்த்துச் செயல்படாமல் காரியத்தில் காட்டத் தவறிவிட்டன என்று சாடினார்.

எதிர்க்கட்சிகளின் மௌனமும் மருதையனின் சவாலும்!

இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் தவெக போன்ற கட்சிகள் ஏன் தீவிரமான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்ற கேள்விக்கு, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளே பதிலளிக்க வேண்டும் என்றார். தான் முன்வைத்துள்ள புள்ளிவிவரங்களிலோ அல்லது கருத்துகளிலோ ஏதேனும் உண்மைக்கு மாறான விஷயங்கள் இருப்பதாகக் கருதினால், தைரியம் உள்ளவர்கள் நேரடி விவாதத்திற்கு வரலாம் என்றும், இச்சட்டம் தொடர்பான உண்மைகளை எதிர்கட்சிகளும் பொதுமக்களும் உரக்கப் பேச வேண்டிய தருணம் இதுவென்றும் மருதையன் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.

ரூ. 22,000 கோடி பிரம்மாண்ட திட்டம்.. ரகசியமாகச் சந்தித்த அதானி – டி.கே.சிவகுமார்! பின்னணி உடைக்கும் ரவிசங்கர்!

MUST READ