Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவில் அடுத்த 40 நாட்களுக்குள் BF 7 வைரஸ் பரவல் வேகமெடுக்கும்

இந்தியாவில் அடுத்த 40 நாட்களுக்குள் BF 7 வைரஸ் பரவல் வேகமெடுக்கும்

-

- Advertisement -

உலகில் தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா பிஎஃப்7 உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

we-r-hiring

சீனாவில் ஒமைக்ரான் வைரசின் புதிய வகை பரவல் வேகம் எடுத்ததால், அந்நாடு திணறி வருகிறது. இது உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக மருத்துவமனைகள் நிரம்பி வழிவது போன்ற காட்சிகள் இணையத்தில் வலம் வந்தது. சீனாவின் நிலை உலகில் அனைவருக்குமே பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவும் பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளதுடன், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அந்த வகையில், கடந்த 2 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதேபோல் வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பிய 6 பேருக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு எந்த வகையான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிய மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் அடுத்த 40 நாட்களுக்குள் கொரோனா பிஎஃப்7 வகை வைரஸ் பரவல் வேகமெடுக்கும் என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதற்கு வீரியம் அதிகம் என்பதால், பாதிக்கப்பட்ட ஒரு நபரிடமிருந்து அவரைச் சுற்றியுள்ள 16 பேருக்கு பரவக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. எப்போதும்
சுகாதாரத்துடன் இருக்கவும், மாஸ்க் அணியவும் அறிவுறுத்தியுள்ளது.

MUST READ