Homeசெய்திகள்இந்தியாசெல்போன், டிவி விலை குறைகிறது- ஒன்றிய அரசு அதிரடி

செல்போன், டிவி விலை குறைகிறது- ஒன்றிய அரசு அதிரடி

-

- Advertisement -

தேக்னா அப்னா தேஸ் (உங்கள் நாட்டை பாருங்கள்) என்ற புதிய திட்டம் சுற்றுலாத்துறைக்காக கொண்டு வரப்படுகிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

nirmala sitharama

பட்ஜெட் உரையின்போது பேசிய நிர்மலா சீதாராமன், “நாடு முழுவதும் 50 முக்கிய இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சுற்றுலாத்துறை என்பது மேம்படுத்தப்படும். ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு‘ (One District One Product) என்ற திட்டம் மூலம் பொருட்கள் மற்றும் புவியியல் குறியீட்டு பொருட்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவும், விற்பனை செய்யவும் மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படும்.

we-r-hiring

உள்நாட்டில் செல்போன் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக, செல்போன் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கான சுங்கவரி குறைப்பு, 23 சதவீதத்திலிருந்து 13% வரை வரி குறைப்பு செய்யப்படுகிறது. ரோபோடிக் ட்ரோன் கேமிராக்கள் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு வழங்கப்படும். தற்போது உள்ள திறன் மேம்பாடு பயிற்சியில் இந்த புதிய அமைப்புகளும் சேர்க்கப்படும்.

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க தனி செயலி உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் சுற்றுலாவை ஊக்குவிக்க சிறப்பு வணிக வளாகம் அமைக்கப்படும். அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் சிறப்பு வணிக வளாகம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான உச்சபட்ச வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Home

சைக்கிள், பொம்மைகளுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் வாகன பேட்டரிக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் – அயன் மூலப் பொருட்களுக்கு வரி கிடையாது. சில மொபைல் உதிரி பாகங்களுக்கு இறக்குமதி செய்வதற்கான சுங்க வரி குறைக்கப்படும். டிவி பேனல்களுக்கான சுங்க வரி 2.5%ஆக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிவி, செல்போன், சைக்கிள் விலை குறையும். ஆதார், பான், டிஜிலாக்கர் முறைகள், தனிநபர் பயன்பாட்டுக்காக பிரபலப்படுத்தப்படும். வங்கிகளின் கேஒய்சி நடைமுறை எளிதாக்கப்படும். அரசின் நிதி தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் பான் கார்டு பொது அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும்” எனக் கூறினார்.

MUST READ