ஆண்டுக்கு மொத்த வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது என பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ளார்.

பட்ஜெட் உரையின்போது பேசிய நிர்மலா சீதாராமன், “ஆண்டிற்கு ஏழு லட்சம் வரை தனிநபர் வருமானம் பெறுவருக்கு இனி வருமான வரி இல்லை. ரூ.7.01 லட்சம் வருமானம் எனில் 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை 5% மீதம் உள்ள 1.01 லட்சத்துக்கு 10% வரி. அதாவது வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சம் வரையான வருமானத்துக்கு 5% வருமான வரி. 12-15 லட்சம் வரை வருமானமும் இருப்பவர்களுக்கு 15% வரி. 7-9 லட்சம் வரை இருப்பவர்களுக்கு 5% வரி. 15 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் 30% வரி விதிக்கப்பட்டுள்ளது.

புதிய வரி சலுகைகள் காரணமாக அரசுக்கு ரூ.38,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். தனிநபர் வருமானம் 2 மடங்காக அதிகரித்து ₹1.97 லட்சமாக உயர்ந்துள்ளது. சிகரெட்களுக்கான வரி மற்றும் புகையிலை பொருட்களும் விலை உயர்கிறது. 16 சதவீதம் வரை வரி உயர்வு செய்யப்படுகிறது.
ஆன்லைன் பணப்பரிமாற்ற உச்சவரம்பு ரூ.9 லட்சம். தங்கம், வெள்ளி மற்றும் வைரம் மீதான சுங்கவரி உயர்த்தப்பட்டது. தங்கம், வெள்ளி மற்றும் வைரம் விலை உயர்கிறது. சிகரெட்களுக்கான வரி மற்றும் புகையிலை பொருட்களும் விலை உயர்கிறது. 16 சதவீதம் வரை வரி உயர்வு செய்யப்படுகிறது. வரும் நிதியாண்டில் ரூ.12.31 லட்சம் கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வருமான வரிக்கான படிவம் எளிமையாக்கி புதுப்பிக்கப்படும். நாட்டின் ஒட்டுமொத்த ஜி.டிபியில் 3.3 சதவீதம் மூலதன செலவுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
