spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாசந்திர பிரியங்கா பதவி நீக்கத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

சந்திர பிரியங்கா பதவி நீக்கத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

-

- Advertisement -

 

சந்திர பிரியங்கா பதவி நீக்கத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
File Photo

புதுச்சேரியில் அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா, பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

we-r-hiring

லியோ படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்

புதுச்சேரியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அண்மையில், தொகுதி மக்களுக்கு எழுதிய கடிதம் மூலம் அறிவித்தார். சாதி மற்றும் பாலின ரீதியாகத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டி, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தது புதுச்சேரி அரசியலில் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

எனினும், சந்திர பிரியங்காவை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசுக்கு முதலமைச்சர் ரங்கசாமி, கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது. இதை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனும் செய்தியாளர் சந்திப்பின் போது, தெரிவித்திருந்தார்.

அக்., 26-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் சந்திரமுகி 2

இந்த நிலையில், சந்திர பிரியங்காவைப் பதவியில் இருந்து நீக்கம் செய்ததற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

MUST READ