பண வீக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் – நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார்.
இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் சாமானியர்களும் தொழில்துறையினரும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் மத்திய அரசு பணவீக்கத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.


இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற தொழில் துறை சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வளர்ந்து வரும் சந்தை, பணவீக்கம் மற்றும் பொருளாதாரம் போன்றவை ஒவ்வொரு நாடுகளுக்கும் வேறுபடும்.
அந்த வகையில் இந்தியாவில் பண வீக்கம் அதிகரிக்கும் போது அதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு ரிசர்வ் வங்கி அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் அந்த வகையில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு தேவையான போதையை நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொள்ள உள்ளதாக உறுதிபட தெரிவித்துள்ளார்.


