spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாடெல்லி மேயர் ஆனார் ஷெல்லி ஓப்ராய்

டெல்லி மேயர் ஆனார் ஷெல்லி ஓப்ராய்

-

- Advertisement -

டெல்லி மேயர் ஆனார் ஷெல்லி ஓப்ராய், 15 ஆண்டுகளுக்கு பிறகு பாரதிய ஜனதா மேயர் பதவியை ஆம் ஆத்மியிடம் இழந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி மாநகராட்சி பெண் ஒருவரை மேயராக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

3 – முறை ஒத்திவைக்கப் பட்ட டெல்லி மேயர் தேர்தல் இன்று நடைப் பெற்றது. தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் நிறுத்தல் பட்டிருந்த ஷெல்லி ஒப்பாய் வெற்றி பெற்று மேயரானார்.

கடந்த மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட டெல்லி மேயர், துணை மேயர் மற்றும் மாநகராட்சி நிலை குழுவின் ஆறு உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்றைய தினம் நடைபெற உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது.

we-r-hiring

அதைத்தொடர்ந்து , மேயரை தேர்தலின் போது, துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் 10 பேர் முதலில் பதவி ஏற்பார்கள், மேயர் தேர்தலில் அவர்களும் வாக்களிப்பார்கள் என அறிவிக்கப்பட்டது

இந்த முடிவுக்கு , ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் , பாரதிய ஜனதா கட்சி உடன் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த மூன்று முறை மேயர் தேர்தல் நடைபெறாமலே ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேர்தலை உடனடியாக அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

மேலும், மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியற்றவர்கள் எனவும் தெரிவித்தது. அதன்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரிந்துரைத்த 22ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இந்நிலையில் தான் டெல்லி மேயர் துணை மேயர் மற்றும் நிலை குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்றைய தினம் நடைபெற்றது.

MUST READ