Homeசெய்திகள்இந்தியாராமர் பாலத்தை தேசியச் சின்னமாக அறிவிக்க கோரிய வழக்கை முடித்துவைத்தது உச்ச நீதிமன்றம்

ராமர் பாலத்தை தேசியச் சின்னமாக அறிவிக்க கோரிய வழக்கை முடித்துவைத்தது உச்ச நீதிமன்றம்

-

- Advertisement -

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரிய சுப்பிரமணியன் சாமியின் வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.

Supreme Court

we-r-hiring

தனுஷ்கோடியிலிருந்து இலங்கை கிழக்கு கடற்கரைப் பகுதி வரை சுண்ணாம்பு கற்களாலான பாலம் போன்ற அமைப்பை ராமர் பாலம் என்று அழைக்ப்படுகிறது. சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் அந்த ராமர் பாலம் சிதைந்து போகும் என்பதால் அந்த திட்டத்திற்கு தடை விதிக்க கோரி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் ராமர் பாலத்திற்கு எவ்வித சேதமும் இல்லாத வகையில் சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரியும் சுப்பிரமணியன் சுவாமி ஒரு புதிய இடையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இவ்வழக்கு கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

விசாரணையின்போது ராமர் பாலத்தை பாரம்பரிய புராதான சின்னமாக அறிவிக்க முடியுமா ? முடியாதா என்பதே இந்த வழக்கில் எழுப்பபட்ட கேள்வியாகும், ஆனால், மத்திய அரசு தனது நிலைப்பாட்டை பதில் மனுவாக தாக்கல் செய்யாமல் வேண்டும் என்றே தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது, இது தொடர் கதையாகி வருகிறது என சுப்பிரமணியன் சுவாமி குற்றஞ்சாட்டினார்

இதனையடுத்து, ராமர் பாலம் தொடர்பான வழக்கில் 6 வாரத்துக்குள் நிலைப்பாட்டை தெரிவிக்க மத்திய அரசுக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,”இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும், வேண்டுமானல் மனுதாரர் கூடுதல் ஆவணங்களை கோரிக்கையாக உரிய அமைப்பு முன்பு கொடுக்கலாம் என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட சுப்ரமணியன்சுவாமி, இந்த விவகாரத்தை வேண்டுமென்றே மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக எந்தவொரு அமைச்சரையோ அல்லது அதிகாரிகளையோ நான் பார்க்க விரும்பவில்லை. ஏனெனில் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் இந்த விவகாரம் இடம்பெற்றுள்ளது. அதனால் இதுதொடர்பான முடிவை முன்னதாக உச்சநீதிமன்றம் வழங்கிய ஆறு வார காலத்திற்குள் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். அதில் ஏதேனும் குழுப்பம் ஏற்படும் பட்சத்தில் நான் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடுவேன் என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரிய விவகாரத்தில் மத்திய அரசின் வாதங்களை நீதிமன்றம் பதிவு செய்வதாகவும், மேலும் இவ்விவகாரம் தொடர்பாக, மனுதாரருக்கு எதிர்காலத்தில் ஏதேனும் நிவாரணம் தேவைப்படும் பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தை மீண்டும் அணுகலாம் எனக்கூறி ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக்கோரி சுப்ரமணியன்சுவாமி தொடர்ந்த இடையீட்டு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதனால், சேதுசமுத்திரம் திட்டத்துக்கு எதிராக சுற்றுச்சூழல் பிரச்னையை வலியுறுத்தி ஓ.பெர்ணாண்டஸ் என்பவரால் தொடரப்பட்ட வழக்கு மட்டும் தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ