spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகர்நாடகாவில் பெண் ஐஏஎஸ்- ஐபிஎஸ் அதிகாரிகள் மோதல்

கர்நாடகாவில் பெண் ஐஏஎஸ்- ஐபிஎஸ் அதிகாரிகள் மோதல்

-

- Advertisement -

பல அதிகாரிகளுடன் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரோகிணி சிந்துாரி நெருக்கமாக உள்ளதாகவும் பல விதிமுறைகளில் ஈடுபடுவதாகவும் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா குற்றச்சாட்டு. உரிய விசாரணை நடத்த கோரிக்கை.

கர்நாடக அறநிலையத் துறை ஆணையராக தற்பொழுது பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரோகிணி சிந்துாரி பல மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு நெருக்கமாக உள்ளதாகவும், இதனால் அதிகாரிகளின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா குற்றஞ்சாட்டியுள்ளார்.

we-r-hiring

மேலும், ரூபா அவரது முகநூலில் ரோகிணி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு தினமும் அனுப்பும் படங்கள் இவை என சில படங்களை வெளியிட்டுள்ளார். கோலாரில் பணியில் இருந்தபோது ஐ.ஏ.எஸ் அதிகாரி ரவி தற்கொலை செய்து கொண்டதிற்கு ரோகிணி தான் காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

ரவி இவருடன் நெருங்கி பழக இடம் கொடுத்த காரணமாக ரவி அவரது குடும்பத்தினருடன் இருந்து பிரிய நேரிட்டது இது போல பல குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது என்றும் ஜாலஹள்ளியில் அவரது கணவர் பெரிய வீடு கட்டி இருக்கிறார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களது அசையா சொத்துகள் பற்றி தெரிவிக்க வேண்டும். ரோகிணி சிந்தூரி தெரிவிக்கவில்லை இதுபோல அவர் மீது ரூபா அடுக்கடுக்காக 19 குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்துள்ள நிலையில் இதுகுறித்து உரிய விசாரணை தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ரோகிணி சிந்துாரி(39). இவர், மைசூரு மாவட்ட கலெக்டராக பணியாற்றிய போது கே.ஆர்.நகர் ம.ஜ.த எம்.எல்.ஏவான சா.ரா. மகேஷ் உடன் மோதல் போக்கை கடைப்பிடித்து அவர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்டமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது உண்மையில் என்று நிருபித்த நிலையில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மணிவண்ணன் மூலமாக சா.ரா.மகேஷ் சந்தித்து ரோகிணி சிந்தூரி சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதை சா.ரா.மகேஷ் ஒத்துக் கொண்டுள்ளார். ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி சமாதானத்திற்கு செல்வதை முதல் முறையாக பார்க்கிறேன்.

இது எவ்வாறு சாத்தியம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கும், ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரிக்கும் இடையே திடீரென்று ஏற்பட்டுள்ள மோதலுக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. அவருக்கு சாதகமாக அரசு செயல்படுவதாகவும் ரூபா கருதுவதால், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனடையில் தன் மீது ரூபா கூறியுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ள ரோகிணி ரூபாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த படங்கள் தற்பொழுது தான் எனக்கு கிடைத்தன. இந்த படங்கள் முன்பாகவே எனக்கு கிடைத்திருந்தால் அதை அப்பொழுதே வெளியிட்டிருப்பேன் கடந்த ஒரு மாதமாக இந்த படங்கள் எனக்கு கிடைத்துள்ளன. இதை முழு அரசு கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று நான் பொறுத்திருந்து பார்ப்பேன். இந்த படங்கள் மூலமாக இது தனிப்பட்ட விவகாரம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. அரசு பணியாளர்கள் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரான செயல் இது.

MUST READ