Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்கடன் தொல்லை தாங்க முடியலையா? RBI-யின் இந்த ஒரு விதி தெரிஞ்சா போதும்.. உங்களை யாரும்...

கடன் தொல்லை தாங்க முடியலையா? RBI-யின் இந்த ஒரு விதி தெரிஞ்சா போதும்.. உங்களை யாரும் மிரட்ட முடியாது!

-

- Advertisement -

“கடன் வாங்கி சரியாகக் கட்டுபவரே புத்திசாலி!” – கிரெடிட் ஸ்கோர் மற்றும் சிபில் பற்றிய முழுமையான வழிகாட்டி!check-improve-understand-cibil-score

வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்குவதற்கும், கடன் அட்டைகள் (Credit Card) பெறுவதற்கும் ஒருவரது தகுதியை நிர்ணயிக்கும் முதன்மை காரணியாக ‘கிரெடிட் ஸ்கோர்’ (Credit Score) விளங்குகிறது. தற்போதைய நிதிச் சூழலில் கிரெடிட் ஸ்கோரின் முக்கியத்துவம் மற்றும் அதனை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்த விரிவான தொகுப்பு…

we-r-hiring

கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?
ஒருவர் கடனைத் திரும்பச் செலுத்தும் திறனைப் பிரதிபலிக்கும் அளவுகோலே கிரெடிட் ஸ்கோர் ஆகும். இந்தியாவில் சிபில் (CIBIL), எக்ஸ்பீரியன் (Experian), ஈக்விஃபேக்ஸ் (Equifax), கிரிஃப் ஹை மார்க் (CRIF High Mark) ஆகிய நான்கு நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் அங்கீகாரத்துடன் கிரெடிட் ஸ்கோரை கணக்கிட்டு வழங்குகின்றன. இதில் ‘சிபில்’ ஸ்கோர் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

கிரெடிட் ஸ்கோர் 300 முதல் 900 வரையிலான புள்ளிகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது:

  • 750 – 900: மிகவும் சிறப்பானது (Excellent)
  • 700 – 749: நல்லது (Good)
  • 650 – 699: பரவாயில்லை (Moderate)
  • 550 – 649: குறைவானது (Low)
  • 300 – 549: மிகவும் மோசமானது (Poor)

கடன் தொல்லை தாங்க முடியலையா? RBI-யின் இந்த ஒரு விதி தெரிஞ்சா போதும்.. உங்களை யாரும் மிரட்ட முடியாது!

கடன் வாங்காதவருக்கு ஏன் உடனடி கடன் கிடைப்பதில்லை?
வாழ்க்கையில் இதுவரை எந்தவொரு கடனும் வாங்காத ஒருவர் முதன்முறையாக வங்கிக்குக் கடன் கேட்டுச் செல்லும்போது, அவரது கணக்கு ‘நியூ டு கிரெடிட்’ (New to Credit) எனக் குறிக்கப்படும். அவருக்கு முன்அனுபவம் அல்லது நிதி வரலாறு (Credit History) இல்லாததால், வங்கிகள் உடனடியாகக் கடன் வழங்கிவிடாது. மாறாக, அவரது வருமான வரி தாக்கல் விவரங்கள், சம்பளப் பட்டியல் மற்றும் 6 மாத வங்கி கணக்கு அறிக்கைகளை (Bank Statements) ஆய்வு செய்த பின்னரே கடனைத் தீர்மானிக்கின்றன.

அதேவேளையில், ஏற்கனவே சிறு கடன்களையோ அல்லது கிரெடிட் கார்டையோ பெற்று, அதற்கான தவணைகளை (EMI) சரியான காலத்தில் செலுத்தி 750-க்கும் மேல் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு, வங்கிகள் குறைந்த வட்டியில் மிக விரைவாகக் கடன் வழங்க முன்வருகின்றன.

கடன் தொல்லை தாங்க முடியலையா? RBI-யின் இந்த ஒரு விதி தெரிஞ்சா போதும்.. உங்களை யாரும் மிரட்ட முடியாது!

கிரெடிட் ஸ்கோரை உயர்த்தவும் பராமரிக்கவும் வழிகள்:

  1. தவணையைத் தவறவிடாதீர்கள்: மாதாந்திரத் தவணைத் தொகையை (EMI) உரிய நாளுக்குள் செலுத்த வேண்டும். 90 நாட்களுக்கு மேல் தவணை செலுத்தத் தவறினால் அக்கணக்கு வாராக்கடனாக (NPA) மாற்றப்பட்டு சிபில் ஸ்கோரைக் கடுமையாகப் பாதிக்கும்.
  2. அனைத்துக் கடன்களும் கணக்கிடப்படும்: கடன் அட்டை (Credit Card), தனிநபர் கடன் (Personal Loan), வாகனக் கடன், விவசாயக் கடன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு கடன் வரை அனைத்துமே கிரெடிட் ஸ்கோர் கணக்கீட்டில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
  3. புதியவர்களுக்கான வழிமுறை: இதுவரை கடன் வரலாறே இல்லாதவர்கள், வங்கியில் ஒரு சிறு தொகையை வைப்பு நிதியாக (FD) வைத்து, அதற்கு இணையாகப் பாதுகாப்பு கடன் அட்டை (Secured Credit Card) பெற்றுப் பயன்படுத்தலாம். இதன் மூலம் தங்களின் நிதி வரலாற்றைப் படிப்படியாக உருவாக்க முடியும்.

கடன் தொல்லை தாங்க முடியலையா? RBI-யின் இந்த ஒரு விதி தெரிஞ்சா போதும்.. உங்களை யாரும் மிரட்ட முடியாது!

கடன் தகுதியும் ரிசர்வ் வங்கியின் விதிகளும்

  • சம்பளத்தில் 40% விதி: ஒருவருக்குக் கடன் தொகையை நிர்ணயிப்பதில் அவரது மாதாந்திர வருமானமும் ரொக்கப் புழக்கமுமே பிரதானமாக அமைகின்றன. வழக்கமாக, ஒருவர் வாங்கும் மொத்தச் சம்பளத்தில் அதிகபட்சமாக 40% வரை இஎம்ஐ செலுத்தும் வசதியைக் கணக்கில் கொண்டே கடனுக்கான தகுதி வழங்கப்படுகிறது.
  • மூத்த குடிமக்களுக்கான கடன்: 65 வயதைக் கடந்தவர்களுக்கு வழக்கமான வணிக வங்கிகள் கடன் வழங்கத் தயங்கினாலும், சில வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) சற்று கூடுதல் வட்டி விகிதத்தில் கடன் வழங்குகின்றன.
  • வாடிக்கையாளர் பாதுகாப்பு விதி: ரிசர்வ் வங்கியின் (RBI) விதிமுறைகளின்படி, கடன் செலுத்துவதில் சிரமம் அல்லது தாமதம் ஏற்படும் சூழலில் வாடிக்கையாளர்களை வற்புறுத்தவோ, அச்சுறுத்தவோ அல்லது மிரட்டவோ கூடாது என்ற கடுமையான வழிகாட்டுதல்கள் அமலில் உள்ளன.

வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி! சிக்னல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க BSNL – Vodafone Idea அதிரடி திட்டம்!

 

MUST READ