இந்தியாவின் ‘சிலிக்கான் வேலி’ என்றழைக்கப்படும் பெங்களூரு நகரத்தில் வாடகை வீடு தேடிச் சென்ற இளம்பெண் ஒருவருக்கு, எதிர்பாராத விதமாக ஏஐ (AI) ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்றில் வேலைவாய்ப்பு கிடைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
வாடகை வீடு தேடிச் சென்ற இடத்தில் சுவாரசியம்
பெங்களூருவில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர், தங்குவதற்குப் புதிய வாடகை வீடு தேடி ஒரு குறிப்பிட்ட முகவரிக்குச் சென்றுள்ளார். ஆனால், அவர் சென்று பார்த்தபோது அந்த வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால் ஏமாற்றமடைந்த அந்தப் பெண், வீட்டின் உரிமையாளரைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக அருகில் இருந்த அலுவலகத்தில் இருந்தவர்களிடம் விசாரித்துள்ளார்.

திறமையைக் கண்டு பணி ஆணை தந்த சிஇஓ
அப்போது அந்த அலுவலகத்தில் இருந்த நபருடன் சாதாரணமாகப் பேசத் தொடங்கியுள்ளார். அந்த நபர் ஒரு பிரபல செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் நிறுவுனராக (Founder) இருந்துள்ளார். உரையாடலின் போது அந்த இளம்பெண்ணின் திறமை, பேச்சுத்திறன் மற்றும் தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றைக் கண்டு வியந்த அந்த நிறுவனர், உடனடியாகத் தனது நிறுவனத்திலேயே அவருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதாக அறிவித்தார்.
வாடகை வீட்டைத் தேடி அலைந்த பெண்ணுக்கு உடனடியாகக் கைநிறையச் சம்பளத்தில் வேலை கிடைத்ததால் அவர் இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோனார்.
“தேடியது வீடு… கிடைத்தது வேலை!” என்ற கதையாக அமைந்த இந்தச் சம்பவம் குறித்துச் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட நிலையில், “பெங்களூரில் மட்டும்தான் வீடு தேடினால் கூட வேலை கிடைக்கும்!” என நெட்டிசன்கள் வியப்புடனும் நகைச்சுவையுடனும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
பட்டா மட்டுமே போதுமா? பூர்வீக சொத்து விற்பனையும், புதைந்துள்ள சட்டச் சிக்கல்களும்!
