Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்விற்பனையில் 23% பிரம்மாண்ட வளர்ச்சி! - இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஒன்பிளஸ் கொடுக்கும் அடுத்த சர்ப்ரைஸ்!

விற்பனையில் 23% பிரம்மாண்ட வளர்ச்சி! – இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஒன்பிளஸ் கொடுக்கும் அடுத்த சர்ப்ரைஸ்!

-

- Advertisement -

ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் சந்தையில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்துள்ள பிரபல ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம், இந்தியாவில் தனது அடுத்த கட்டப் புதிய டேப்லெட்டை அறிமுகம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ டீஸரை வெளியிட்டுள்ளது.விற்பனையில் 23% பிரம்மாண்ட வளர்ச்சி! - இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஒன்பிளஸ் கொடுக்கும் அடுத்த சர்ப்ரைஸ்!

ஆண்டின் இறுதியில் புதிய டேப்லெட் அறிமுகம்
இந்தியச் சந்தையில் தங்களது டேப்லெட் வரிசையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், நடப்பு ஆண்டின் பிற்பகுதியில் (Coming Later) ‘OnePlus Pad 4’ என்ற புதிய ஸ்மார்ட் டேப்லெட்டை அறிமுகப்படுத்த ஒன்பிளஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட டீஸர் தகவல்களை நிறுவனம் பகிர்ந்துள்ளதால், தொழில்நுட்ப பிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

we-r-hiring

டேப்லெட் விற்பனையில் 23% பிரம்மாண்ட வளர்ச்சி!
இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவன டேப்லெட்டுகளுக்குக் கிடைத்துள்ள வரவேற்பு குறித்துத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நடப்பாண்டின் முதல் பாதியில் (First Half) ஒன்பிளஸ் நிறுவனத்தின் டேப்லெட் விற்பனை முந்தைய காலகட்டங்களை விட 23% வரை கணிசமான வளர்ச்சியைச்சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்தை வளர்ச்சியையும் வாடிக்கையாளர்களின் ஆதரவையும் தொடர்ந்து, அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ‘OnePlus Pad 4’ மாடலை இந்தியாவில் களம் இறக்கி, டேப்லெட் சந்தையில் தனது பிடியை மேலும் வலுவாக்க ஒன்பிளஸ் தீவிரமாக முயன்று வருகிறது.

கம்மி விலையில புது ஃபிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின்! – இந்திய சந்தையை அதிரவைக்க வரும் ஷாவ்மி.. எப்போ தெரியுமா?

 

MUST READ