Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: 16% விலை உயர்வுடன் அதிரடி மாற்றங்கள்!

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: 16% விலை உயர்வுடன் அதிரடி மாற்றங்கள்!

-

- Advertisement -

​​இந்தியத் தொலைத்தொடர்பு சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், தனது நான்கு முக்கிய ப்ரீபெய்ட் திட்டங்களை திடீரென நீக்கியுள்ளது. அத்துடன், தனது இதர ப்ரீபெய்ட் கட்டணங்களை 16 சதவீதம் வரை உயர்த்தி, வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: 16% விலை உயர்வுடன் அதிரடி மாற்றங்கள்!

மாற்றத்தின் விவரங்கள்:
​திட்ட உயர்வு: அதிக மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த ரூ. 299 ப்ரீபெய்ட் திட்டம், தற்போது 16% விலை உயர்த்தப்பட்டு ரூ. 349 என மாற்றப்பட்டுள்ளது.

we-r-hiring

பயனாளர் மாற்றம்: இந்தத் திட்டத்தில் நாள்தோறும் வழங்கப்பட்டு வந்த 1.5 ஜிபி டேட்டா (Data) வசதி, தற்போது 2 ஜிபி டேட்டாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

​திட்டங்கள் ரத்து: ரூ. 579, ரூ. 619 மற்றும் ரூ. 649 ஆகிய மூன்று முக்கிய ப்ரீபெய்ட் திட்டங்களை ஏர்டெல் நிறுவனம் முழுமையாக நீக்கியுள்ளது.

​சந்தை நிலவரம்:
இந்தியத் தொலைத்தொடர்பு சந்தையில் ஜியோ நிறுவனம் சுமார் 40% முதல் 41% சந்தைப் பங்கையும், ஏர்டெல் நிறுவனம் சுமார் 32% முதல் 33% சந்தைப் பங்கையும் கொண்டுள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களும் சந்தையில் ஏகபோக ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன. தொடக்கத்தில் குறைந்த கட்டணத்தில் சேவைகளை வழங்கி மக்களை ஈர்த்த இந்த நிறுவனங்கள், தற்போது போட்டி போட்டுக்கொண்டு கட்டணங்களை உயர்த்தி வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

​தற்போது ஜியோ நிறுவனம் தனது வரம்பற்ற (Unlimited) வாய்ஸ் அழைப்புகள், தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் கூடிய ரூ. 349 திட்டத்தை வழங்கி வரும் அதே வேளையில், ஏர்டெல் நிறுவனமும் அதற்கு நிகரான வகையில் தனது திட்டங்களை மாற்றியமைத்துள்ளது.

ஏர்டெல் யூசரா நீங்க? – இனி மாசம் மாசம் பாக்கெட் காலி.. வெளியான அதிர்ச்சி அறிவிப்பு!

MUST READ