spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாததால் மேனகா மீது வழக்கு பதிவு

தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாததால் மேனகா மீது வழக்கு பதிவு

-

- Advertisement -

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடக்கூடிய நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் 27 தேதி ஈரோட்டில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கக்கூடிய நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 20-ம் தேதி ஆலமர தெரு பகுதியில் அனுமதியின்றி பிரச்சாரம் செய்ததாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மீது ஈரோடு தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாததால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

we-r-hiring

ஒவ்வொரு வேட்பாளர்களும் பிரச்சாரம் செய்வதற்கு முன் தேர்தல் அதிகாரிகளிடம்  முன் அனுமதி என்பதை பெற வேண்டும். குறிப்பாக பிரச்சாரத்திற்கு எத்தனை பேர் செல்கின்றோம், எந்த வழித்தடத்தில் செல்கின்றோம், என்பதை குறித்து பிரச்சாரத்திற்கு முன்பாக எழுத்துப்பூர்வமாக தேர்தல் அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற வேண்டும் என்பது தேர்தல் விதிமுறை.

ஆனால், வேட்பாளர் மேனகா கடந்த 20-ம் தேதி ஆலமர தெரு பகுதியில் 30க்கும் மேற்பட்டோருடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பணியில் இருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இது தொடர்பாக ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

MUST READ