2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுகின் தொகுதி பங்கீடு குறித்த முழு விரத்தையும் வெளியிட்டுள்ளது.


மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், திமுக தலைமையிலான கூட்டணியில் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் வருமாறு:

உதயசூரியன் சின்னம்: மதிமுக (3 இடங்கள்), மமக, கொமதேக மற்றும் இதர சிறிய கட்சிகள் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே போட்டியிட முடிவு செய்துள்ளன. இதன் மூலம் மொத்தம் 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் களம் காண்கிறது.
புதிய வரவு தேமுதிக: இந்தக் கூட்டணியில் முதல்முறையாக இணைந்துள்ள பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது காங்கிரஸுக்கு அடுத்தபடியாக அதிக இடங்கள் பெற்ற கட்சியாக தேமுதிகவை மாற்றியுள்ளது.
விசிகவின் நிலைப்பாடு: தொல். திருமாவளவன் தலைமையிலான விசிகவுக்கு இந்த முறை 8 இடங்கள் (6 தனித் தொகுதிகள் + 2 பொதுத் தொகுதிகள்) ஒதுக்கப்பட்டுள்ளன.
கமல்ஹாசன் ஆதரவு: மக்கள் நீதி மய்யம் (MNM) இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாகவும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
திமுக தனது வேட்பாளர் பட்டியலை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு – முக்கிய அம்சங்கள்!
