Homeசெய்திகள்அரசியல்தேர்தல் விதிகளை பின்பற்றாக தவெக கூட்டம் ரத்து

தேர்தல் விதிகளை பின்பற்றாக தவெக கூட்டம் ரத்து

-

- Advertisement -

அரசியல் கட்சிகள் 48 மணி நேரத்திற்கு முன்பு நிகழ்ச்சிக்கான அனுமதியை தேர்தல் அதிகாரியிடம் வாங்க வேண்டும் என்பது விதி, அதனை தவெக முறையாக பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் விதிகளை பின்பற்றாக தவெக கூட்டம் ரத்து

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற இருந்தது.

we-r-hiring

இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் மேலும் 1000 நபர்கள்  கலந்து கொள்வார்கள் எனவும் அனுமதி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் முறையான முன் அனுமதி பெறாததால் கட்சியின் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கவில்லை என தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.  அரசியல் கட்சியின் நிகழ்ச்சிகளுக்கு பிரச்சாரங்களுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக அனுமதி பெற வேண்டும் என்பது விதி. ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் நேற்று மாலை 4 மணிக்கு இன்றைய நிகழ்ச்சிக்கு அனுமதி கோரியதால் தேர்தல் அதிகாரி நிகழ்ச்சிக்கான அனுமதியை வழங்கவில்லை.

இதை எறியாத தமிழக வெற்றிக் கழகத்தினர் நிகழ்ச்சி நடைபெறும் ஹோட்டலில் 800-க்கும் மேற்பட்ட நாற்காலிகளை அமைத்து நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை செய்து வந்தனர் இந்த நிலையில் அனுமதி இல்லாத நிலையில் அனைத்து பணிகளும்  நிறுத்தப்பட்டுள்ளது.

முறையான அறிவிப்பை வாங்காமல் காவல்துறையிடம்  பாதுகாப்பு பணிக்கு அனுமதி கோரி இருந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு உதவி ஆணையர்கள் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் நிகழ்ச்சி ரத்து செய்வதைக்கூட முறையாக கட்சியினர் தெரிவிக்காமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தவெக உடன் கூட்டணி இல்லை – 234 தொகுதிகளிலும் போட்டி – வேல்முருகன் ஆவேசம்

MUST READ