Homeசெய்திகள்அரசியல்பாமகவும் தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு..

பாமகவும் தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு..

-

- Advertisement -

அதிமுக கூட்டணியில் 18 சீட்டுக்களை பெற்றுள்ள பாமகவும் தாமரை சின்னத்தில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.பாமகவும் தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு..

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாசுக்கும் அவருடைய மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கட்சியின் தலைவர் மற்றும் மாம்பழம் சின்னம் யாருக்கு என்கிற உரிமை கோரல் பிரச்சனை நீடித்து வருகிறது. இது தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் சிவில் நீதிமன்றத்தில் மூன்று நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்று கடந்த 23 ஆம் தேதி உச்சநீதிமன்றம் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதுவரை அதற்கான தீர்ப்பு எதுவும் வரவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தேதி நெருங்கி வருகிறது.

“தமிழகத்தில் மறைமுகமாக காலூன்றத் துடிக்கும் பாஜக”: மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் அதிரடி அலசல்

we-r-hiring

இதற்கிடையில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் தமிழ் மாநில காங்கிரஸ்,பாரிவேந்தரின் ஐஜேகே, ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் பாமக விற்கு சின்னம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருந்துவருவதால் அன்புமணி தரப்பு டென்ஷனில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் பிஜேபியை சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர் பாமகவை சேர்ந்த 18 வேட்பாளர்களையும் தாமரை சின்னத்தில் போட்டியிட வைக்க பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு டாக்டர் அன்புமணி தரப்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆவடியை குறிவைக்கும் பிஜேபி – பின்னணி காரணங்கள் என்ன?

MUST READ