Homeசெய்திகள்ஆவடிஆவடியை குறிவைக்கும் பிஜேபி - பின்னணி காரணங்கள் என்ன?

ஆவடியை குறிவைக்கும் பிஜேபி – பின்னணி காரணங்கள் என்ன?

-

- Advertisement -

ஆவடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக போட்டியிடுகிறது. இந்த செய்தி ஆவடி திமுக நிர்வாகிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆவடியை குறிவைக்கும் பிஜேபி - பின்னணி காரணங்கள் என்ன?தமிழ்நாட்டில் பாஜக தாமரை சின்னத்தை பரவலாக கொண்டு செல்வதற்கான முயற்சியை படிப்படியாக செய்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பாஜக தங்களுக்கென்று 27 தொகுதிகளை கேட்டு பெற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் தங்களுடன் பயணிக்கின்ற ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், பாரிவேந்தரின் ஐஜேகே, ஜான் பாண்டியன் போன்ற இன்னும் சில அமைப்புகளுக்கும் அதிமுக விடம் சீட்டுக்களை பெற்று தாமரை சின்னத்தில் போட்டியிட வைக்கிறார்கள். அதிமுக கூட்டணியில் பாஜக 37 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடுகிறது.

2026 தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது பாஜக வாங்கப் போகும் வாக்கு சதவீதங்கள் அதிகரிக்கும். இப்படி ஒவ்வொரு தேர்தலிலும் பாஜக வியூகங்களை அமைத்து தாமரை சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து வளர்ந்து வருகிறது.

we-r-hiring

2024 நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந் செந்தில் 7,96,956 வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றியைப் பெற்றார். அதை திமுக கூட்டணி கொண்டாடியது. ஆனால் அவருக்கு அடுத்து பாஜக வேட்பாளர் பால கணபதி 2,24,801 வாக்குகளை பெற்றார் என்பதை மறந்துவிடார்கள். அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக இரண்டாம் இடத்திற்கு வரவில்லை. பாஜக வேட்பாளர் தான் வந்தார். இதில் கணிசமான வாக்குள் ஆவடி தொகுதியில் இருந்து கிடைத்துள்ளது.

முஸ்லீம்களும், கிரிஸ்துவர்களும் கணிசமான எண்ணிக்கையில் வாழக்கூடிய ஆவடி தொகுதியில் இந்து அமைப்புகளும் இயற்கையாகவே வேரூன்றும். வேரூன்றி இருக்கிறது. இந்து அமைப்புகளுக்கும், பாஜக நிர்வாகிகளுக்கும் எப்பொழுதும் ஒரு திட்டம் இருக்கும். இஸ்லாமிய, கிரிஸ்துவ வெறுப்பு மற்றும் இந்து, இந்து வெறியை தூண்டி அதன்மூலம் வாக்குகளை அறுவடை செய்யலாம் என்கிற திட்டத்தில் வருகின்றனர்.

ஆவடியில் மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்ற அதிகாரிகள், ஊழியர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அதேபோன்று ஆவடியில் குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்களின் ஆதிக்கமும் நிறைந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் பிஜேபி ஆதரவு மனநிலை கொண்டவர்கள். வட மாநிலத்தை சேர்ந்தவர்களின் வாக்கு வங்கி கணிசமாக இருக்கிறது. இப்படி பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி பாஜகவினர் ஆவடியை தேர்ந்தெடுத்துள்ளனர்.

2026 தேர்தலில் திமுக வெற்றிப் பெற்று விடும். அதில் மாற்று கருத்து எவருக்கும் இல்லை. அதற்கு பின்னர் வருகின்ற ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுக இருக்க வேண்டிய இடத்தில் பாஜக இடம் பெறுவதை தடுக்கவே முடியாது.

பாஜக பேட்டியிடும் 27 தொகுதிகள் – பட்டியல் வெளியீடு…

MUST READ