அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 27 தொகுதிகளின் விவரத்தை எடப்பாடி பழனிசாமி அறவித்துள்ளாா்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில் அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 27 தொகுதிகள் குறித்த விவரத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளாா்.

ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம் பின் வருமாறு,
மயிலாப்பூர், தளி,முடக்குறிச்சி,உதகமண்டலம்,அவிநாசி,திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு,கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர், ராதாபுரம், நாகர்கோவில், விளவங்கோடு, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை, ராமநாதபுரம், குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம் (தனி) மற்றும், திருவள்ளுர் மாவட்டத்தில் ஆவடி ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ளது.
இந்த அறிவிப்பு வெளியாகியதன் மூலம் அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தெளிவடைந்ததை தொடர்ந்து, அடுத்த கட்டமாக வேட்பாளர் அறிவிப்புகள் மற்றும் பிரச்சார பணிகள் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…யார் யாருக்கு எந்த தொகுதி?
