23 பேர் கொண்ட அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 23 பேர் கொண்ட இந்த பட்டியலை அறிவித்தார். இதுவரை பா.ஜ.க.க்கு 27, பா.ம.க.க்கு 18, அ.ம.மு.க.க்கு 11, த.மா.கா.க்கு 5 மற்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய நீதிக்கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு இதுவரை தொகுதிகள் ஒதுக்கப்படாத நிலையில், இரு கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம் 62 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 6 தொகுதிகள் வழங்கப்பட்டாலும், 163 தொகுதிகளில் அ.தி.மு.க. நேரடியாக போட்டியிடும் நிலை உள்ளது. அதே நேரத்தில், சில கூட்டணி கட்சிகளை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடச் செய்து, போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அ.தி.மு.க. தலைமையகம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த சூழலில், அ.தி.மு.க. தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் 23 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதில், எடப்பாடி தொகுதியில் அவர் மீண்டும் களமிறங்க உள்ளாா்.
- நத்தம் – நத்தம் விஸ்வநாதன்,
- வேப்பனஹள்ளி – கே.பி.முனுசாமி,
- ராயபுரம் – ஜெயகுமார்,
- தொண்டாமுத்தூர் – எஸ்.பி.வேலுமணி,
- திண்டுக்கல் – திண்டுக்கல் சீனிவாசன்,
- நன்னிலம் – காமராஜ்,
- மதுரை மேற்கு – செல்லூர் ராஜூ,
- மயிலம் – சி.வி.சண்முகம்,
- குமாரபாளையம் – தங்கமணி,
- பாலக்கோடு – கே.பி.அன்பழகன்,
- விராலிமலை – சி.விஜயபாஸ்கர்,
- வேதாரண்யம் – ஓ.எஸ்.மணியன்
- கோவில்பட்டி – கடம்பூர் ராஜூ,
- திருமங்கலம் – ஆர்.பி.உதயகுமார்,
- சிவகாசி – கே.டி.ராஜேந்திர பாலாஜி,
- மதுரவாயல் – பென்ஜமின்,
- கலசபாக்கம் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி,
- பவானி – கருப்பணன்,
- கரூர் – எம்.ஆர். விஜயபாஸ்கர்,
- அரியலூர் – தாமரை ராஜேந்திரன்,
- ஜோலார்பேட்டை – கே.சி.வீரமணி,
- திருபரங்குன்றம் – ராஜன்செல்லப்பா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த முதற்கட்ட பட்டியல் மூலம் அதிமுக தேர்தல் பணிகளை தீவிரப்படித்தியுள்ளது.
அதிமுக கூட்டணி இறுதிப் பட்டியல் – யார் யாருக்கு எவ்வவளவு தொகுதிகள்?
