Homeசெய்திகள்ஆவடிபட்டாபிராமில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி: சென்னை கார்ப்பரேஷன் பாக்சிங் கிளப் அணி சாம்பியன் பட்டம்...

பட்டாபிராமில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி: சென்னை கார்ப்பரேஷன் பாக்சிங் கிளப் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்!

-

- Advertisement -

ஆவடி அடுத்த பட்டாபிராமில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இரண்டு நாள் குத்துச்சண்டை போட்டியில், அதிக பதக்கங்களை வென்று சென்னை கார்ப்பரேஷன் பாக்சிங் கிளப் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

சென்னை

we-r-hiring

​திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் கக்கன்ஜி நகர் சத்திரம் பள்ளியில், சமத்துவ இளைஞர்கள் நற்பணி மன்றம் சார்பில் இந்த மாவட்ட அளவிலான இரண்டு நாள் குத்துச்சண்டை போட்டிகள் விறுவிறுப்பாக நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, சேலம், கோயம்புத்தூர், தர்மபுரி, தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

​வீரர்களுக்கு வயது மற்றும் தகுதியின் அடிப்படையில் சி.யு.பி, சப்-ஜூனியர், ஜூனியர், யூத், சீனியர் என ஆண்கள் மற்றும் பெண்களுக்குத் தனித்தனியாகப் பிரிவுகள் பிரிக்கப்பட்டு, ‘நக்கவுட்’ முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இரண்டு நாட்களும் நடைபெற்ற இந்த மோதல்கள் களத்தில் மிகவும் விறுவிறுப்பாகக் காணப்பட்டன. ரிங்கில் இறங்கிய வீரர்கள் ஒவ்வொரு புள்ளிகளையும் பெறுவதற்காக ஒருவரையொருவர் ஆக்ரோஷமாகத் தாக்கி தங்களின் அதிரடித் திறமைகளை வெளிப்படுத்தினர். குறிப்பாக, ஆண்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், பெண் வீராங்கனைகளும் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திப் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.

​போட்டிகளின் இறுதி நாளான நேற்று, ஒட்டுமொத்தமாக அதிக பதக்கங்களை வாரிக் குவித்து, பயிற்சியாளர் செந்தில்நாதன் தலைமையிலான சென்னை கார்ப்பரேஷன் பாக்சிங் கிளப் அணி முதலிடத்தைப் பிடித்து வெற்றி வாகை சூடியது. அந்த அணிக்குச் சாம்பியன் கோப்பையுடன் 20,000 ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, திறம்பட விளையாடிய ஐ.பி.சி திருநின்றவூர் அணி இரண்டாம் இடத்தையும், சென்னை ஜி.எஸ்.பி.சி அணி மூன்றாம் இடத்தையும் பெற்றன. நான்காம் இடத்தை பூந்தமல்லியைச் சேர்ந்த பாக்சிங் அணி தட்டிச் சென்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கும், சாதனை படைத்த அணிகளுக்கும் போட்டியை முன்னின்று நடத்திய சமத்துவ இளைஞர்கள் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு, கோப்பைகளையும் ரொக்கப் பரிசுகளையும் வழங்கிப் பாராட்டி கௌரவித்தனர்.

MUST READ