Homeசெய்திகள்ஆவடிஆவடி - பட்டாபிராம் இடையே பராமரிப்பு பணி - குறிப்பிட்ட தேதிகளில் மின்சார ரயில் சேவையில்...

ஆவடி – பட்டாபிராம் இடையே பராமரிப்பு பணி – குறிப்பிட்ட தேதிகளில் மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

-

- Advertisement -

சென்னை புறநகர்ப் பகுதியான ஆவடி மற்றும் பட்டாபிராம் ரயில் நிலையங்களில் அவசரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், குறிப்பிட்ட சில தேதிகளில் மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ஆவடி - பட்டாபிராம் இடையே பராமரிப்பு பணி - குறிப்பிட்ட தேதிகளில் மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

​இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, “​ஆவடி மற்றும் பட்டாபிராம் ரயில் நிலையப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, வருகிற 2, 3, 5, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் அதிகாலை நேர மின்சார ரயில்களின் பாதைகளில் மாற்றம் செய்யப்படுகிறது. ​அதன்படி, ரயில்கள் வழக்கமான வழித்தடத்திற்குப் பதிலாக ‘டவுன் பாஸ்ட் லைனில்’ (Down Fast Line) இயக்கப்படும் என்பதால், சில நிலையங்களில் ரயில்கள் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் வருமாறு:

we-r-hiring

​சென்னை சென்ட்ரல் – திருத்தணி: சென்னை சென்ட்ரலில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரயில், ஆவடி – பட்டாபிராம் இடையே ‘டவுன் பாஸ்ட் லைனில்’ இயக்கப்படும். இதனால் இந்த ரயில் இந்து கல்லூரி மற்றும் பட்டாபிராம் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.ஆவடி - பட்டாபிராம் இடையே பராமரிப்பு பணி - குறிப்பிட்ட தேதிகளில் மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

​சென்னை கடற்கரை – அரக்கோணம்: சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 4.05 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில், ஆவடி – பட்டாபிராம் இடையே மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதால் இந்து கல்லூரி மற்றும் பட்டாபிராம் ஆகிய நிலையங்களில் நிற்காது.

​சென்னை சென்ட்ரல் – திருவள்ளூர்: சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 4.30 மணிக்கு புறப்பட்டு திருவள்ளூர் செல்லும் மின்சார ரயிலும் ஆவடி – பட்டாபிராம் இடையே ‘டவுன் பாஸ்ட் லைனில்’ இயக்கப்படும். இதனால் இந்த ரயில் இந்து கல்லூரி மற்றும் பட்டாபிராம் ஆகிய நிலையங்களில் நிற்காது.

​சென்னை சென்ட்ரல் – பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்: சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 4.15 மணிக்கு புறப்பட்டு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் மின்சார ரயில் ஆவடி – பட்டாபிராம் இடையே மாற்றுப் பாதையில் இயக்கப்படும். இதனால் இந்த ரயில் இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் மட்டும் நிற்காது. ​எனவே, குறிப்பிட்ட தேதிகளில் அதிகாலை நேரத்தில் பயணம் செய்யும் புறநகர் ரயில் பயணிகள் இந்த வழித்தட மாற்றங்களைக் கவனித்து, தங்களது பயணங்களைத் திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

ஆவடியில்  நடுரோட்டில் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்… வீடியோ எடுத்த செய்தியாளர்களைப் பார்த்ததும் ஓட்டம்!

MUST READ