Homeசெய்திகள்ஆவடிஆவடியில் எல்.பி.ஜி தட்டுப்பாடு - கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் ஆட்டோக்கள்…

ஆவடியில் எல்.பி.ஜி தட்டுப்பாடு – கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் ஆட்டோக்கள்…

-

- Advertisement -

ஆவடியில் எல்.பி.ஜி தட்டுப்பாடு காரணமாக கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் ஆட்டோக்கள் காத்திருக்கின்றன.ஆவடியில் எல்.பி.ஜி தட்டுப்பாடு - கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் ஆட்டோக்கள்…ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் நடத்திய போரின் காரணமாக அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ஈரான் பல்வேறு நடவடிக்கைகள எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஹர்முஸ் நீர்வழிப்பாதையை மூடி உள்ளது. இதனால், உலகம் முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தியாவிலும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் வணிக சிலிண்டர்கள் கிடைக்காமல் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் நடுத்தரமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனா். விலைவாசியும் விண்ணை முட்டுகின்றன. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக பரவிய வதந்தி பரவியது. இதன் காரணமாகரோல் மக்கள் பங்குகளுக்கு  படையெடுக்க தொடங்கினா்.

we-r-hiring

இந்த நிலையில்,  ஆவடியில் எல்.பி.ஜி தட்டுப்பாடு காரணமாக கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் ஆட்டோக்கள் காத்திருக்கின்றன. எல்.பி.ஜி. தட்டுப்பாட்டால் ஆவடியில் ஆட்டோ, கார் ஆகியவற்றுக்கு நிரப்பப்படும் கேஸ் பங்குகள் பல மூடப்பட்டுள்ளன. கேஸ் நிரப்ப ஆவடி மார்க்கெட் முதல் காமராஜர் நகர் வரை சுமார் 1 கி.மீ தூரத்திற்கு மேல் கடும் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் ஆட்டோக்கள் வரிசையில் காத்திருக்கின்றன.

நிதி பகிர்வில் தமிழகத்தை புறக்கணிக்கும் பாஜகவை தமிழ்நாடு புறக்கணிக்க வேண்டும் – உதயநிதி வேண்டுகோள்…

 

MUST READ