Homeசெய்திகள்ஆவடிகிராமத்தின் பெயரை வருவாய் கணக்கில் சேர்க்க 30 ஆண்டுகளாக போராடும் மக்கள்!!

கிராமத்தின் பெயரை வருவாய் கணக்கில் சேர்க்க 30 ஆண்டுகளாக போராடும் மக்கள்!!

-

- Advertisement -

30 ஆண்டுகளாக கிராமத்தின் பெயரை வருவாய் கணக்கில் சேர்க்க பழஞ்சூர் பாப்பான்சத்திரம் மக்கள் போராடி வருகின்றனா். வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அப்பகுதி கூறியுள்ளனா்.கிராமத்தின் பெயரை வருவாய் கணக்கில் சேர்க்க 30 ஆண்டுகளாக போராடும் மக்கள்!! திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஊராட்சியில் உள்ள பழஞ்சூர் பாப்பான்சத்திரம் ஆகிய கிராமங்கள் வருவாய் கணக்கில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மேவளூர்குப்பம் என உள்ளது. இதனால் சார்பதிவாளர் அலுவலகம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ளது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வருவாய்த்துறை வழங்கும் பட்டா, பிறப்பு, இறப்பு சான்று என அனைத்து சான்றுகளிலும் மேவளூர்குப்பம் என உள்ளது. இதனால் மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனை கண்டித்து பழஞ்சூர், பாப்பான்சத்திரம் கிராம மக்கள் பல்வேறு கட்ட போரட்டங்களை நடத்தி வந்த நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலை  புறக்கணிப்பதாகவும், யாருக்கும் வாக்கு செலுத்த மாட்டோம் என கூறி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். பழஞ்சூர் சாலையில் இருந்து சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்வதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போரட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் காவல்துறையினர் உட்பட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வருவாய்த்துறை வரும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என அப்பகுதி மக்கள் பிடிவாதம் வண்ணம் உள்ளனா்.

தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஏப்ரல் 23-ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு!

we-r-hiring

MUST READ