ஆவடி தொகுதியில் அதிமுகவே போட்டியிட வேண்டும் என்றும், பாஜகவிற்கு கொடுத்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இபிஎஸ் இல்லத்தை அதிமுக நிர்வாகிகள் முற்றுகையிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில், ஆவடி தொகுதியில் அதிமுகவே போட்டியிட வேண்டும் என்றும், அந்த தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் அங்கு போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பில் ஏற்கனவே தேர்தல் பணிகளையும் தொடங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

சில வாரங்களுக்கு முன்பு ஆவடியில் நடந்த பிரச்சாரத்தின் போது, எடப்பாடி பழனிசாமி தனது வாகனத்தில் அப்துல் ரஹீமை இணைத்துக்கொண்டு பிரச்சாரம் செய்தாா். இதனால், அந்த தொகுதி அதிமுகவிற்கே கிடைக்கும் என்ற நம்பிக்கை உறுவாகியுள்ளது.
ஆனால், ஆவடி தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அமைச்சர் நாசர் போட்டியிடும் நிலையில், அந்த தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் சீட் கிடைக்காத அதிருப்தியில் இபிஎஸ் இல்லத்திற்கு முன் அப்துல் `ரஹீம் ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் குவிந்து முற்றுகையிட்டுள்ளனர். இதில், ஒரு சில நிர்வாகிகள் இபிஎஸ் யை சந்தித்து ஆவடி தொகுதியை அதிமுகவிற்கே பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை வைக்க வைத்துள்னர்.
ஆனால் இபிஎஸ் உதவியாளர் ”அப்துல் ரஹீமை நேரில் வந்து பார்க்க சொல்லுங்கள்” என கூறி திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் மேலும் அதிருப்தியடைந்த நிர்வாகிகள், தங்களது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காமல் வீடு திரும்பியுள்ளனர்.
