Homeசெய்திகள்ஆவடிஆவடியில் சா.மு.நாசர் வெற்றி உறுதி - 2 வது இடத்திற்கு பாஜக - தவெக இடையே...

ஆவடியில் சா.மு.நாசர் வெற்றி உறுதி – 2 வது இடத்திற்கு பாஜக – தவெக இடையே கடும் போட்டி

-

- Advertisement -

ஆவடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆவடி சா.மு.நாசரின் வெற்றி ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. 2 வது இடத்திற்கு பாஜக வேட்பாளருக்கும் தவெக வேட்பாளருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.ஆவடியில் சா.மு.நாசர் வெற்றி உறுதி - 2 வது இடத்திற்கு பாஜக - தவெக இடையே கடும் போட்டி

ஆவடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக ஆவடி சா.மு.நாசர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக ராஜசிம்ம மகேந்திரன் (எ) அஸ்வின் என்பவரும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராகப் ரமேஷ்குமார் என்பவரும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் புனிதா சண்முகம் என்பவரும்  போட்டியிடுகின்றனர்.

we-r-hiring

கடந்த 2008 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு நடைபெற்றது. அப்போது பூவிருந்தவல்லி தொகுதியில் இருந்து பிரிந்து ஆவடி சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது. ஆவடி சட்டமன்றத் தொகுதி முதல் தேர்தல் 2011ல் நடைபெற்றது. அந்த தேர்தலில் அதிமுக சார்பில் அப்துல் ரஹீம் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக தாமோதிரன் என்பவர் போட்டியிட்டார். ஆவடி சட்டமன்றத் தொகுதியில் முதல் சட்டமன்ற உறுப்பினராக எஸ்.அப்துல்ரஹீம் 1,10,102 வாக்குகள் பெற்று  43,238 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தாமோதரன் 66,864 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

அதனை தொடர்ந்து 2016 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் மாஃபா பாண்டியராஜன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக வேட்பாளராக ஆவடி சா.மு.நாசர் போட்டியிட்டார். அந்த தேர்தலில் க.பாண்டியராஜன் 1,08,064 வாக்குகள் பெற்று வெறும் 1,395 வாக்குகள் வித்தியாசத்தில் நாசரை தோற்கடித்தார். ஆவடி நாசர் 1,06,669 வாக்குகளும், மதிமுக சார்பில் போட்டியிட்ட அந்திரிதாஸ் 22,848 வாக்குகளும் பாமக வேட்பாளர் ஆனந்தகிருஷ்ணன் 12,428 வாக்குகளும், பாஜக வேட்பாளர் லோகநாதன் 7,232 வாக்குகளையும் பெற்றார்கள்.

ஈரான் துறைமுகங்களுக்கு அமெரிக்கா குறி… பதற்றம் உச்சம்

கடந்த 2021 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக ஆவடி சா.மு.நாசரும் அதிமுக சார்பில் மாஃபா பாண்டியராஜனும் இரண்டாவது முறையாக இருவரும் நேரடியாக மோதினார்கள். இதில் ஆவடி சா.மு.நாசர் 55, 275 வாக்குகள் கூடுதலாகப் பெற்று பாண்டியராஜனை தோற்கடித்தார்.

2026 தேர்தல் களத்தில் போட்டியிடும் தவெக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இருவரும் வெளியூரை சேர்ந்தவர்கள். தொகுதிக்கு புதியவர்கள்.

ஆவடி சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரை திமுக வேட்பாளருக்கு எதிராக அதிமுக வேட்பாளர் போட்டியிட்டு இருந்தால் வெற்றி வாய்ப்பை கணிப்பது மிகவும் கடினமானதாக இருந்திருக்கும். அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடுவதால் திமுக வேட்பாளர் ஆவடி சா.மு.நாசரின் வெற்றி என்பது மிகவும் சுலபமானதாக மாறிவிட்டது.

ஆவடி, திருநின்றவூர் நகராட்சி, திருவேற்காடு நகராட்சி மற்றும் நடுகுத்தகை, நெமிலிச்சேரி ஊராட்சிகள் உள்ளடக்கிய ஆவடி சட்டமன்றத் தொகுதியில் ஆதிதிராவிடர் மக்கள், வன்னியர்கள், நாயுடு மற்றும் இஸ்லாமியர்கள், கிரிஸ்த்துவர்கள் கணிசமாக உள்ளனர். இந்த தொகுதியில்  4,28,772 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3,45,000 வாக்குகள் பதிவாகளாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் துறைமுகங்களுக்கு அமெரிக்கா குறி… பதற்றம் உச்சம்

இந்த நிலையில் திமுக வேட்பாளர் ஆவடி சா.மு.நாசர் 1,55,000 வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராஜசிம்ம மகேந்திரன் (எ) அஸ்வின் 90,000 முதல் 1,00,000 வாக்குகள் வரை பெறலாம் என்று கருதப்படுகிறது.

அதேபோன்று தவெக வேட்பாளர் ரமேஷ்குமார் 50,000 முதல் 80,000 வாக்குகள் வரை பெறுவார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் புனிதா சண்முகம் 30,000 வாக்குகள் வரை பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

ஆவடி தொகுதியை பொறுத்தவரை 2 வது இடத்தை யார் பிடிப்பது என்பதில் பாஜக – தவெக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்தியாவிற்கு முன்னோடியான திராவிட மாடல் அரசின் திட்டங்கள்

MUST READ