Homeசெய்திகள்ஆவடிதிருவேற்காட்டில் அவலம்: கிராம நிர்வாக அலுவலகம் அடிக்கடி பூட்டப்படுவதால் பொதுமக்கள் வெயிலிலும் மணி கணக்கில் காத்திருப்பு!

திருவேற்காட்டில் அவலம்: கிராம நிர்வாக அலுவலகம் அடிக்கடி பூட்டப்படுவதால் பொதுமக்கள் வெயிலிலும் மணி கணக்கில் காத்திருப்பு!

-

- Advertisement -

திருவேற்காட்டில் செயல்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலகம் (VAO Office) முறையான நேரத்திற்குத் திறக்கப்படாமலும், அடிக்கடி பூட்டப்பட்டும் கிடப்பதால், சான்றிதழ்கள் மற்றும் ஆவணச் சரிபார்ப்பிற்காக வரும் பொதுமக்கள் மணி கணக்கில் காத்துக் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கிராம நிர்வாக

we-r-hiring

மூன்று கிராமங்களுக்கான ஒரே அலுவலகம்
திருவேற்காடு கிரீன் கார்டன் பகுதியில் செயல்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலகம், திருவேற்காடு, வீரராகவபுரம் மற்றும் சுந்தரசோழவரம் ஆகிய மூன்று முக்கியக் கிராமங்களின் வருவாய்த் துறைத் தேவைகளுக்காகச் செயல்பட்டு வருகிறது. தற்போது வருவாய்த் துறையின் பெரும்பாலான சான்றிதழ் சேவைகள் ஆன்லைன் மயமாக்கப்பட்டிருந்தாலும், விண்ணப்பங்களின் உண்மைத்தன்மையை ஆராயவும், அசல் ஆவணங்களைச் சரிபார்க்கவும் பொதுமக்கள் இந்த அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டியது கட்டாயமாக உள்ளது.

பூட்டிய கதவு – தவிக்கும் மக்கள்
இந்நிலையில், இன்று காலை முதலே இந்த அலுவலகம் பூட்டப்பட்டுக் கிடந்தது அங்கு வந்த பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக காலை 10 மணிக்கே அலுவலகத்திற்கு வர வேண்டிய கிராம நிர்வாக அலுவலர் (VAO) கோபி, மதியம் 12 மணியைத் தாண்டியும் அலுவலகத்திற்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

​இதனால், தங்களின் அன்றாடக் கூலி வேலைகள் மற்றும் இதரப் பணிகளை விட்டுவிட்டு, சான்றிதழ் தேவைகளுக்காகக் காலை 10 மணி முதல் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் அலுவலக வாசலிலேயே மணி கணக்கில் காத்துக் கிடக்கும் சூழல் உருவானது.

தொடர்கதை ஆகும் அவதி:
இன்று மட்டுமல்லாமல், கடந்த சில நாட்களாகவே இந்த அலுவலகம் குறிப்பிட்ட நேரத்திற்குத் திறக்கப்படாமல், அடிக்கடி பூட்டப்படுவதாகப் பகுதி மக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இதனால், எளிய மக்கள் தங்களின் அத்தியாவசியச் சான்றிதழ்களைப் பெற முடியாமல் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

அதிகாரிகளுக்குப் பொதுமக்கள் கோரிக்கை
அரசு அலுவலகங்கள் பொதுமக்களின் தேவைகளுக்காக உரிய நேரத்தில் செயல்பட வேண்டும் என்ற விதிமுறை இருக்கும் போது, இவ்வாறு அலட்சியமாகச் செயல்படும் கிராம நிர்வாக அலுவலர் மீது மாவட்ட வருவாய்த் துறை உயர் அதிகாரிகள் உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அலுவலகம் தடையின்றிச் செயல்பட வழிவகை செய்ய வேண்டும் என்றும் திருவேற்காடு பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

MUST READ