ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில், புதிய முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ புகைப்படம் பொருத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, அரசு அலுவலகங்களில் முதலமைச்சரின் புகைப்படத்தை பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ புகைப்படம் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அந்தப் புகைப்படம் அரசு அலுவலகங்களில் வைக்கப்படத் தொடங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, ஆவடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சில அரசு அலுவலகங்களில் முதலமைச்சர் ஜோசப் விஜயின் புகைப்படம் பொருத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஆவடியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் முதலமைச்சரின் புகைப்படம் பொருத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பணியை தவெக நிர்வாகிகள் நேரடியாக மேற்கொண்டு அலுவலகத்தில் புகைப்படத்தை மாட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.
மேலும், ஆவடி தொகுதிக்குட்பட்ட பிற அரசு அலுவலகங்களிலும் முதலமைச்சரின் புகைப்படம் பொருத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், ஆவடி மாநகராட்சி மற்றும் திருநின்றவூர் நகராட்சிக்குட்பட்ட அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு கிடைத்த பின்னரே புகைப்படம் அதிகாரப்பூர்வமாக பொருத்தப்படும் என கூறப்படுகிறது.
ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்
