ஆவடியில் காாில் கொண்டு செல்லப்பட்ட 18 தங்க நாணயங்களை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் பிரபு. இவா் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். விக்னேஷ் இன்று காலை இனோவா காரில் ஆவடியில் இருந்து அயப்பாக்கம் செல்லும் வழியில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 9 சவரன் கொண்ட ஆவணம் இல்லாத 18 தங்க நாணயங்களை கொண்டு செல்வதாக காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
உடனே அதனையறிந்து தேர்தல் பறக்கும் படையினர் அவற்றை பறிமுதல் செய்தனா். பின்னா் ஆவணங்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருந்தனா். தற்போது ஆவடி தேர்தல் நடத்தும் அதிகாரி செல்வி மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கண்ணன் ஆகியோர் முன்னிலையில் தங்க நாணயம் குறித்து விசாரணை முடிந்து ஆவணம் இல்லாத காரணத்தினால் தற்போது சீல் வைக்கப்பட்டு கருவூலத்தில் தங்க நாணயகளை ஒப்படைத்தனர்.
திருவள்ளூர்: மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது

