மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026-ஆம் ஆண்டிற்கான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இன்று பிற்பகல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக 85.20 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டுடன் (88.39%) ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் சுமார் 3% குறைந்துள்ளது. இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் மாணவர்களை விட 6.73% அதிகமாக உள்ளது. மண்டல வாரியான தேர்ச்சி பட்டியலில் திருவனந்தபுரம் மண்டலம் 95.62 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
மாணவர்கள் தங்களது முடிவுகளைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களின் பதிவு எண் (Roll Number), பள்ளி குறியீடு (School Code) மற்றும் அட்மிட் கார்டு ஐடி (Admit Card ID) ஆகியவற்றை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்:

மேலும், UMANG செயலி மற்றும் DigiLocker மூலமாகவும் மாணவர்கள் தங்களது டிஜிட்டல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வில் தேர்ச்சி பெறாத அல்லது ஒரு பாடத்தில் மட்டும் தோல்வியடைந்த மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் (Supplementary Exams) வரும் ஜூலை மாதம் நடைபெறும் என்று வாரியம் அறிவித்துள்ளது. மேலும், மதிப்பெண் மறுமதிப்பீடு (Re-evaluation) செய்ய விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்ப தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.
+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு – 95.20% தேர்ச்சியுடன் மாணவர்கள் சாதனை
