தமிழக வரலாற்றில் முதன்முறையாகத் தொங்கு சட்டமன்றம் உருவாகியுள்ளது.
2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், தவெக-வுக்கு ஆதரவளிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை தற்போது 113 ஆக உயர்ந்துள்ளது. ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், இன்னும் 5 எம்எல்ஏக்களின் ஆதரவை மட்டும் பெறும் முனைப்பில் தவெக தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
நடந்து முடிந்த தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், தமிழக வரலாற்றில் முதன்முறையாகத் தொங்கு சட்டமன்றம் உருவாகியுள்ளது. இதனால், ஆட்சியைத் தக்கவைக்கவும், பெரும்பான்மையை உறுதி செய்யவும் தவெக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பிற சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவைத் திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தின் அரசியல் போக்கைத் தீர்மானிக்கும் இந்தச் சூழல், மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எப்போது பதவி ஏற்பது? என உத்தரவு கேட்பதற்காக சேலம் புறப்பட்டார் முதல்வர் ரங்கசாமி

