டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது. நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முதல்முறையாக பங்கேற்றுள்ளாா்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 11-வது நிதி ஆயோக் கூட்டம் இன்று தொடங்கியது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மாநிலங்களின் முன்னேற்றம், நிதி மேலாண்மை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தும் நோக்கில் இந்தக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முதல்முறையாக பங்கேற்றுள்ளார். மேலும், அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களும் கலந்துகொண்டுள்ளனர். மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்கள், மத்திய-மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், முதுகுவலி காரணமாக புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சமநிலையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கான பல்வேறு கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருமுடிவாக்கம் குடோனில் பயங்கர தீ விபத்து – கரும்புகையால் பரபரப்பு
