Homeசெய்திகள்தமிழ்நாடுரூ.634 கோடி லஞ்சப் புகார் -  முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு…

ரூ.634 கோடி லஞ்சப் புகார் –  முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு…

-

- Advertisement -

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது ரூ.634 கோடி லஞ்சப் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.ரூ.634 கோடி லஞ்சப் புகார் -  முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு…

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது ரூ.634 கோடி லஞ்சப் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில், துறையின் கீழ் சுமார் 2,538 பணியிடங்களை நிரப்புவதற்காக ரூ.634 கோடி அளவுக்கு லஞ்சம் கைமாறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருணின் உத்தரவின்படி, கே.என்.நேருவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. நகராட்சி நிர்வாகத் துறையில் உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து அமலாக்கத்துறை முன்பே விசாரணை மேற்கொண்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் மாநில புலனாய்வு அமைப்புகளிடம் பகிரப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றச்சாட்டுகள் குறித்த இறுதி உண்மை நிலை நீதிமன்ற மற்றும் விசாரணை அமைப்புகளின் முடிவுகளின் அடிப்படையில் தெளிவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

த.வெ.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இல்லை – வீரபாண்டியன் விளக்கம்

MUST READ