Homeசெய்திகள்தமிழ்நாடுகாயிதே மில்லத் நினைவிடத்தில் பரபரப்பு… செல்வப்பெருந்தகைக்கு எதிராக திமுகவினர் கோஷம்

காயிதே மில்லத் நினைவிடத்தில் பரபரப்பு… செல்வப்பெருந்தகைக்கு எதிராக திமுகவினர் கோஷம்

-

- Advertisement -

காயிதே மில்லத் நினைவிடத்தில் செல்வப்பெருந்தகைக்கு எதிராக திமுக தொண்டர்கள் கோஷமிட்டதால், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.காயிதே மில்லத் நினைவிடத்தில் பரபரப்பு… செல்வபெருந்தகைக்கு எதிராக திமுகவினர் கோஷம்

சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு திமுக – காங்கிரஸ் உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் தொடர்ந்து அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக இருந்து வருகிறது. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகியதையும், அதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகியதையும் அடுத்து இரு கட்சித் தொண்டர்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது.

we-r-hiring

இந்த நிலையில், காயிதே மில்லத் பிறந்தநாளையொட்டி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர்போர்வை அணிவித்து அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அங்கு வந்தார்.

அப்போது அங்கு இருந்த சில திமுக தொண்டர்கள் செல்வப்பெருந்தகையை நோக்கி எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியதாக கூறப்படுகிறது. கூட்டணியை விட்டு விலகியதற்காக அதிருப்தியை வெளிப்படுத்திய அவர்கள், காங்கிரஸ் தலைமையை விமர்சித்தனர். இதனால் இரு தரப்பினரிடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினர் தலையிட்டு நிலைமையை சமாளித்தனர். இதையடுத்து எந்தவித அசம்பாவிதமும் இன்றி நிகழ்ச்சி நிறைவடைந்தது.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “திமுகவினருடன் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. கூட்டணியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அவர்களிடம் வருத்தம் இருக்கலாம். அந்த உணர்வுகளை மேலும் தீவிரப்படுத்த விரும்பவில்லை. இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்பதா இல்லையா என்பது அவர்களது அரசியல் முடிவு” என்று தெரிவித்தார்.

முன்னதாக, தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் திமுக தலைமையை சந்திக்காமல் புதிய அரசியல் பாதையைத் தேர்வு செய்தது குறித்து திமுக தரப்பில் விமர்சனங்கள் எழுந்து வந்தன. இதற்கிடையில், காங்கிரஸுடன் இனி கூட்டணி இல்லை என்று திமுக தரப்பிலிருந்து வெளிப்படையான கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பங்கேற்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நாட்டின் நலன் சார்ந்த முக்கிய பிரச்சினைகளில் தங்களது குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்று திமுக தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஆட்சி பொறுப்பேற்ற பிறகும் பரப்புரைதானா? விஜயை சாடிய அன்புமணி

MUST READ