Homeசெய்திகள்தமிழ்நாடுசுட்டெரித்த கோடையும், சுழன்றடித்த மின்சார மீட்டரும்! இந்தியாவில் 270.82 ஜிகாவாட்டைத் தொட்ட மின் தேவை!

சுட்டெரித்த கோடையும், சுழன்றடித்த மின்சார மீட்டரும்! இந்தியாவில் 270.82 ஜிகாவாட்டைத் தொட்ட மின் தேவை!

-

- Advertisement -

நாடு முழுவதும் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை (Heat Wave) தாக்கம் காரணமாக, இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவை இதுவரை இல்லாத அளவிற்கு புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளதாக மத்திய மின்சக்தி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.சுட்டெரித்த கோடையும், சுழன்றடித்த மின்சார மீட்டரும்! இந்தியாவில் 270.82 ஜிகாவாட்டைத் தொட்ட மின் தேவை!

நடப்பு கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட மிகத் தீவிரமாக சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களை வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள வீடுகள், பொது இடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் ஏசி (Air Conditioners) மற்றும் ஏர் கூலர்களின் (Air Coolers) பயன்பாட்டை பெருமளவில் அதிகரித்துள்ளனர். இந்த அதீத மின்சாதனப் பயன்பாடே நாட்டின் மின் நுகர்வு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

we-r-hiring

மத்திய மின்சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் மின் தேவை மற்றும் நுகர்வு கடந்த ஆண்டை விடப் பல மடங்கு அதிகரித்துள்ளது. ​மே மாத மின் நுகர்வு (2025 VS 2026): கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த மின் நுகர்வு 147.89 பில்லியன் யூனிட்களாக இருந்த நிலையில், நடப்பு 2026 ஆம் ஆண்டு மே மாதத்தில் அது 164.98 பில்லியன் யூனிட்களாக அதிரடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 11.55 சதவீத அசுர வளர்ச்சியாகும்.

​உச்சபட்ச மின் தேவை (Peak Power Demand):

இதேபோல், கடந்த 2025 ஆம் ஆண்டில் பதிவான உச்சபட்ச மின் தேவையான 230.99 ஜிகாவாட் என்ற அளவை தவிடுபொடியாக்கி, இந்த ஆண்டு மே மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த உச்சபட்ச மின் தேவை 270.82 ஜிகாவாட் என்ற புதிய வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளது. ஏசி மற்றும் கூலர்களின் பயன்பாடு பெருமளவில் அதிகரித்துள்ளதால், மின் கட்டமைப்புக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெப்ப அலையின் தீவிரத்தை உணர்ந்து, பொதுமக்களுக்கு தங்குதடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்ய மத்திய மற்றும் மாநில மின்சார வாரியங்கள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதிகரித்து வரும் நாட்டின் உட்கட்டமைப்புத் தேவைகள் மற்றும் தீவிரமடையும் கோடைக் கால நிலைக்கேற்ப, மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளில் மின்சக்தி அமைச்சகம் தற்பொழுது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட ”தாயுமானவர் திட்டம்” தொடரும் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

MUST READ