திமுகவின் தோல்விக்கு காரணம் தேடுகிறார் ஸ்டாலின். உங்கள் குடும்பம் தான் காரணம் என ஒவ்வொரு திமுக தொண்டரும் கூறுகிறார்கள்” என்று விஜய் விமர்சித்துள்ளாா்.
திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பேசியதாவது, தேர்தலில் உண்மையாக உழைத்த தன்னை முதல்வராக அல்ல முதல் சேவகனாக மாற்றிய மக்களுக்கு தலைவணங்குகிறேன். “என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம். குறிப்பாக, திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையால் இன்று இந்த ஆட்சி அமைந்துள்ளது. அந்த நம்பிக்கையை காப்பாற்றும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அதனை உணர்ந்தே நாங்கள் செயல்பட்டு வருகிறோம். திமுகவின் தோல்விக்கான காரணத்தை இன்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கான பதிலை வெளியே தேட வேண்டிய அவசியமில்லை. குடும்ப அரசியல்தான் அந்த தோல்விக்குக் காரணம் என்று திமுக தொண்டர்களே கூறி வருகிறார்கள். மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளத் தவறியதன் விளைவுதான் இந்தத் தோல்வி.
தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் பரவியதற்கும், அதன் காரணமாக சமூகத்தில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும் பொறுப்பேற்காமல், மற்றவர்களை குற்றம் சாட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களின் பாதுகாப்பும், சமூக நலனும் எங்கள் அரசின் முதன்மை நோக்கமாக இருக்கும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு மாற்றங்களை கொண்டு வரத் தொடங்கியுள்ளோம். மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் பணியில் இருக்கிறோம். 200 யூனிட் இலவச மின்சாரம், டாஸ்மாக் கடைகள் மூடல், விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்கள் மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழக அரசியலில் தற்போது உண்மையான போட்டி த.வெ.க. மற்றும் திமுக இடையேதான் உள்ளது. எங்களை விமர்சிப்பவர்களிடம் நான் ஒரு வேண்டுகோள் மட்டும் வைக்கிறேன். நீங்கள் பேசிக்கொண்டே இருங்கள்; நாங்கள் வேலை செய்துகொண்டே இருப்போம்.
மக்களை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது. தமிழக மக்கள் மிகவும் தெளிவாக சிந்தித்து வாக்களித்திருக்கிறார்கள். அவர்களை அவமதிப்பது ஜனநாயகத்தை அவமதிப்பதற்கு சமம். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘சிங்கப்பெண்’ திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. சமூகநீதி, மாநில உரிமை, நதிநீர் உரிமை உள்ளிட்ட எந்த விவகாரத்திலும் எங்கள் அரசு சமரசம் செய்யாது.ஊழல் இல்லாத, லஞ்சம் இல்லாத, மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை வழங்குவதே எங்கள் இலக்கு. தமிழ்நாட்டின் 234 தொகுதிகளும் எங்களுடைய பொறுப்பு. மக்களுக்காக உழைப்பதே என் பணி; அதைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருப்பேன்.” இவ்வாறு முதலமைச்சர் விஜய் பேசினார்.
திமுக சின்னத்தில் போட்டியிட்டதால் தவெகவை ஆதரிக்க முடியவில்லை – துரை வைகோ
