Homeசெய்திகள்அரசியல்திமுக சின்னத்தில் போட்டியிட்டதால் தவெகவை ஆதரிக்க முடியவில்லை - துரை வைகோ

திமுக சின்னத்தில் போட்டியிட்டதால் தவெகவை ஆதரிக்க முடியவில்லை – துரை வைகோ

-

- Advertisement -

தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசியல் நகர்வுகள் மற்றும் கூட்டணி குறித்த கேள்விகளுக்கு, மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி அதிரடியான கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
திமுக சின்னத்தில் போட்டியிட்டதால் தவெகவை ஆதரிக்க முடியவில்லை - துரை வைகோ​செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ள அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் அவருக்கு மதிமுக ஆதரவு அளிக்குமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ​

அதற்குப் பதிலளித்த துரை வைகோ,​”துரதிஷ்டவசமாக நாங்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுவிட்டோம். உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதால், எங்களால் தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடியாத நிலை உள்ளது. மேலும், கூட்டணி விவகாரத்தைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் நான் எந்த முடிவும் எடுத்துவிட முடியாது. கட்சியின் பொதுக்குழுவும், தலைமையும் தான் அதைத் தீர்மானிக்க வேண்டும்” ​என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

​கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்பிய போதிலும், தேர்தல் ஆணையத்தின் சில நடைமுறைச் சிக்கல்களால் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டிய சூழல் உருவானது. இதனைத் தற்போதைய அரசியல் சூழலோடு ஒப்பிட்டு, தவெகவுக்கு ஆதரவு தர முடியாததற்கான தார்மீக மற்றும் அரசியல் காரணத்தை அவர் விளக்கியுள்ளார். ​துரை வைகோவின் இந்த வெளிப்படையான பேச்சு, தற்போதைய திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகளுக்குள், தவெகவின் வருகை எந்தளவுக்கு விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிமுக பிளவு  முதல் தற்காலிக இணைப்பு வரை…பரபரப்பான அரசியல் பின்னனி…

MUST READ