தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சிப் பொறுப்பில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, அது கட்சியின் வளர்ச்சியையோ செயல்பாடுகளையோ எந்த வகையிலும் பாதிக்காது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளாா். அண்ணாமலை,பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தின் உரிமைகள் மற்றும் நலன்களை போதுமான அளவில் முன்னிறுத்தவில்லை என குற்றம்சாட்டியிருந்த நிலையில், அந்த குற்றச்சாட்டுகளை நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தமிழக மக்களின் நலன்கள் மற்றும் மாநிலத்தின் உரிமைகளை பாதுகாக்கும் பணியில் பாஜக தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.

மேலும், பாஜக என்பது தனிநபர்களை மையமாகக் கொண்டு இயங்கும் கட்சி அல்ல என்றும், அதன் கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஒரு அரசியல் இயக்கம் என்றும் அவர் விளக்கினார். கட்சியின் வளர்ச்சியும் செயல்பாடுகளும் ஒரே நபரை சார்ந்தது அல்ல என்பதால், அண்ணாமலையின் விலகல் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். அதே நேரத்தில், பாஜக தனது கொள்கை வழிப்பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்து, தமிழக மக்களின் நலன்களுக்காக பணியாற்றும் என்றும் அவர் உறுதியளித்தார்.
