Homeசெய்திகள்தமிழ்நாடுஅண்ணாமலையின் 'வி தி லீடர்ஸ்' இயக்கத்தில் இணையவுள்ளாரா ரஜினியின் மருமகன் விசாகன்? அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையவுள்ளாரா ரஜினியின் மருமகன் விசாகன்? அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

-

- Advertisement -

தமிழக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள ‘வி தி லீடர்ஸ்’ மக்கள் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்தின் மருமகனும் தொழிலதிபருமான விசாகன் வணங்காமுடி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அண்ணாமலையின் 'வி தி லீடர்ஸ்' இயக்கத்தில் இணையவுள்ளாரா ரஜினியின் மருமகன் விசாகன்? அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

பாஜக முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை அண்மையில் தொடங்கியுள்ள ‘வி தி லீடர்ஸ்’ மக்கள் இயக்கம், உறுப்பினர் சேர்க்கை மற்றும் அமைப்பு விரிவாக்கப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், விசாகன் வணங்காமுடி இயக்கத்தில் இணையலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.  விசாகன் வணங்காமுடி தொழில்துறை பின்னணி கொண்டவர். அவர் அரசியல் நடவடிக்கைகளில் நேரடியாக பங்கேற்க உள்ளாரா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனினும், இந்த தகவல் சமூக வலைத்தளங்களிலும் அரசியல் ஆர்வலர்கள் மத்தியிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

we-r-hiring

‘வி தி லீடர்ஸ்’ இயக்கம் அறநெறி அரசியல், இளைஞர் பங்களிப்பு மற்றும் உள்ளாட்சி மட்டத்தில் புதிய தலைமுறையினரை அரசியலுக்கு கொண்டு வருவது உள்ளிட்ட நோக்கங்களுடன் செயல்பட்டு வருவதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். விசாகன் வணங்காமுடியின் இணைவு தொடர்பான தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டால், அது இயக்கத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியில் கவனம் பெறக்கூடிய நிகழ்வாக அமையலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

சொல்வது ஒன்று, செய்வது ஒன்று…மின்வெட்டு விவகாரத்தில் தவெக அரசை சாடிய டி.டி.வி.தினகரன்…

MUST READ