தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் களம், வேட்பாளர்களின் தகுதி நிலைப்பாடு மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசியல் நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளரும் வழக்கறிஞருமான முனைவர் தராசு ஷ்யாம் பல்வேறு அதிரடியான மற்றும் சட்டப் பூர்வ கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
“தவெக வேட்புமனுக்கள் செல்லாது” – சட்டரீதியான பின்னணி
இடைத்தேர்தல் குறித்துப் பேசிய தராசு ஷ்யாம், தவெக சார்பில் களம் காணும் இரு வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் சட்டப்படி நிராகரிக்கப்பட வேண்டியவை என்று சுட்டிக்காட்டினார்.

நிலுவையில் உள்ள விசாரணை: சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் மீது சபாநாயகரிடம் அளிக்கப்பட்டுள்ள தகுதிநீக்க மனுக்கள் இன்னமும் நிலுவையில் உள்ளன. அதில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.
நீதிமன்றத் தீர்ப்புகள்: ஒருவர் மீது தகுதிநீக்கம் தொடர்பான கேள்வி நிலுவையில் இருக்கும்போது அவர் செய்யும் ராஜினாமா, தகுதிநீக்க நடவடிக்கையை நீர்த்துப்போகச் செய்யாது எனப் பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவுபடுத்துகின்றன.
தேர்தல் அதிகாரியின் கடமை: தேர்தல் நடத்தும் அதிகாரி நடுநிலையோடு செயல்பட்டால் இந்த வேட்புமனுக்களை நிராகரிக்க வேண்டும். அவ்வாறு செய்யாதபட்சத்தில், இது நீதிமன்றத்திற்குச் செல்லக்கூடிய மிகப்பெரிய சட்டச் சிக்கலை உருவாக்கும் என எச்சரித்தார்.
![]()
வலிந்து திணிக்கப்பட்ட ஜனநாயக விரோத இடைத்தேர்தல்
இயற்கை மரணம் அல்லது தகுதிநீக்கம் போன்ற காரணங்களால் மட்டுமே இடைத்தேர்தல் வர வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், தற்போது நடைபெறவுள்ள இடைத்தேர்தல் திட்டமிட்டு மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று எனக் குற்றம்சாட்டினார். மாற்றுக்கட்சியில் இருந்த எம்.எல்.ஏ-க்களை வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைத்து, மீண்டும் அவர்களுக்கே வாய்ப்பு தருவது விசித்திரமான அரசியல் உத்தி என்றும், இதனால் அரசுப் பணமும் வாக்காளர்களின் நேரமும் வீணடிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்தார்.
கூட்டணிக் கட்சிகளுக்கு எச்சரிக்கை மணி
தவெக தனிப் பெரும்பான்மை அல்லது மெஜாரிட்டி பெற்றுவிட்டால், தற்போது கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் (விசிக) போன்ற கட்சிகளுக்கே அது பெரும் பின்னடைவாக அமையும் என எச்சரித்தார். காங்கிரஸ் மற்றும் விசிக தலைவர்கள் தங்களது கொள்கை மற்றும் ஓட்டு வங்கியின் முக்கியத்துவத்தை உணராமல், ஆளுங்கட்சித் தரப்பின் நகர்வுகளுக்கு ஆதரவாகச் செயல்படுவது அவர்களின் சொந்த அரசியலுக்கே ஆபத்தாக முடியும் என்றார்.

வெளிமாநில நபர்களின் ஆதிக்கம்: புதுப் புயல்
விஜய்யைச் சுற்றியுள்ள ஆலோசகர்கள், டெல்லி பிரதிநிதிகள் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த நபர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது என்ற விமர்சனத்தையும் தராசு ஷ்யாம் எழுப்பினார். ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இதுபோன்ற பிற மொழி நபர்களின் ஆதிக்கத்தை அம்மாநில அரசியல் கட்சிகள் அனுமதிக்க மாட்டா என்றும், தமிழ்நாட்டில் மட்டும் இத்தகைய போக்கைக் கேள்விகேட்காமல் விட்டுவைப்பது ஆரோக்கியமான அரசியல் சூழல் அல்ல என்று அவர் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளாா்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவு: தமிழ் உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு!
