Homeசெய்திகள்தமிழ்நாடுபிரதமர் மோடி உடனடியாகத் தலையிட வேண்டும்! – NEET-SS தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க முன்னாள் முதலமைச்சர்...

பிரதமர் மோடி உடனடியாகத் தலையிட வேண்டும்! – NEET-SS தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

-

- Advertisement -

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான NEET-SS தேர்வின் தகுதி மதிப்பெண்ணைக் குறைத்து, காலியாக உள்ள இடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.பிரதமர் மோடி உடனடியாகத் தலையிட வேண்டும்! – NEET-SS தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

1,857 மருத்துவ இடங்கள் காலி – முன்னாள் முதலமைச்சர் கவலை:
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (DGHS) NEET-SS தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க மறுத்து வருகிறது.

we-r-hiring

இதன் காரணமாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசு மருத்துவர்களுக்கான 40 இடங்கள் உட்பட, நாடு முழுவதும் சுமார் 1,857 உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு (Super Speciality) இடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி கேள்வி:
தகுதி மதிப்பெண்ணைக் குறைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், தகுதியான மருத்துவர்கள் இருந்தும் இவ்வளவு இடங்களை வீணடிப்பது மருத்துவச் சேவைத் துறையைப் பெரிதும் பாதிக்கும் எனக் கவலை தெரிவித்துள்ளார்.

“Zero Percentile-க்கு மாற்றிடுக!”கடந்த ஆண்டுகளைப் போலவே இப்போதும் “Zero Percentile” என்ற அடிப்படையில் தகுதி மதிப்பெண்ணைக் குறைத்து, காலியாக இருக்கும் 1,857 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களையும் தகுதியான மருத்துவர்களைக் கொண்டு நிரப்பப் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாகத் தலையிட்டு உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

“கட்டணக் கொள்ளையை ஆதரிக்கிறதா தவெக அரசு?”.. ஆம்னி பேருந்துகள் விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் சாடல்!

MUST READ